பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் அல்வா எனச் சொல்லி அங்கோடி விட்டாலும் செல்வா! நீ தப்ப முடியாது-அல்வா விருதுநகர்க் (கொடியில் உன்னுடனே கட்டாயம் வருது எனக் காத்திருப்பேன் நான்! என்பது முதல் பாட்டு. இவரது கடிதத்தை நம்பி, நான் விருது நகர் ஸ்டேஷனுக்கு வந்ததுதான் மிச்சம். ஆசாமி வரவில்லை. பிறகு நான் அவருக்கு - அல்வாவைப் பார்ஸலில் அனுப்பி வைத்து விட்டேன், நான் எந்தக் கடையிலே அல்வா வாங் கினேனோ, அந்தக் கடைக்காரர் அப்போதுதான் ஒரு புத்தகம் வெளியிடும் கம்பெனியில் பங்குதாரராகச் சேர்ந்திருந்தார். இது புதுமைப்பித்தனுக்கும் தெரியும். தாம் ஆவலோடு எதிர் பார்த்திருந்த அல்வாவைப் புதுமைப்பித்தன் தின்று பார்த்து விட்டு எனக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தின் பகுதி இது: ....அல்வா கிடைத்தது. இன்று தான் தின்று ..எர்த் தேன்.... நீ அதில் ரொம்பப் பணத்தைக் கரியாக்கி இருப் பாயோ என்பதுதான் வருத்தம், ஊன்றித் தின்று பார்த்தால் ... (இன்னார்) அல்வா போடுவதைவிட, புஸ்தகம் போடுவது தால் நல்லது. நெல்லையில் கோயில் மாதிரி அந்தஸ்து எவ கித்து வந்த அல்வா இப்படியாச்சே என்பதுதான் எனக்கு ரொம்ப வேதனை. அல்வாவில் சில பகுதிகள் பாகிஸ்தான் கேட்கின்றன. நீ அனுப்பிய அல்வா. அதற்காக அதை நான் மன்னிக்கிறேன் '.... விருதுநகரில் ரயில் இரண்டு நிமிஷங்கள்தான் நிற்கும். ஆனால் நீ செங்கோட்டை வரை என்னுடன் வருவதற்கு ரயில் காரன் ஆட்சேபிக்க மாட்டான். நீயும் நானும் இரண்டு மணி நேரமாவது பேசிப் பொழுதை கழிக்கலாமே. டிக்கட் வாங்கிய தும் ' உனக்கு எழுதி விடுகிறேன். அல்வா ' வேண்டாம். அல்வாவை விருதுநகர்க் கொடியில் 'எதிர் நோக்கிச் சீட்டுக்கவி விட்டது போலவே, புதுமைப்பித்தன் - பல