பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 புதுமைப்பித்தன் பத்தில் காலமாகிப்போன மனைவி, பிற்பகுதியில் உயிர் பெற்று எழுத்து வந்து விட்டாள்! இதைப்பற்றிப் புதுமைப்பித்தனிடம் ஒருவர் கேட்டர்:

  • 'என்னய்யா இது? உங்கள் கதையில் செத்தவர்கள்கூடப்

பிழைத்து விடுவார்களோ?* புதுமைப்பித்தன் அதற்குச் சாதுரியமாகப் பதில் கொடுக் தார்: வீணாக என்னால் ஒரு பெண் ஏன் சாக வேண்டும்? எனவே நான் அவளுக்கு உயிர் கொடுத்து விட்டேன்! பதுமைப்பித்தன் நண்பர்களின் இன்பத்திலும் துன் பெத்திலும் பங்கெடுக்கும். பண்பு பெற்றவர், நானும் அவரும் மிகவும் நெருங்கிப் பழகிய காலத்தில் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் - ஒரு மகத்தான இலக்கியம் - வந்தது. கடிதம் வத்ததற்குக் காரணம் இது: நான் ஒரு பத்திரிகாலயத்தில் வேலை பார்த்து வந்தேன். அது ஒரு முதலாளித்துவ ஸ்தாபனம், எழுத்தாளர்களின் உரிமை. பறி போவதற்குக் கேட்க வேண்டுமா? என் உரிமைக்கு ஆபத்து வந்தது. இதன் காரண மாக எனக்கும் நிர்வாகத்துக்கும் இழுபறி. 'உரிமை யைப் பறிகொடு; இல்லை, வெளியேறு” என்றது நிர்வாகம்,

  • வேலையை வேண்டுமானால் பறி; உரிமையைப் பறிக்காதே'

என்று நின்றேன் நான். இந்தச் சந்தர்ப்பத்தில் புதுமைப்பித் தன் நான் உரிமையைப் பறிகொடுத்து வெளியேறி விட்டேனோ என்ற அங்கலாய்ப்பில் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் 18 பக்கங்கள் கொண்டது. தபால்காரனிடம் தெண்டம் கொடுத்துத்தான் அதை நான் வாங்கினேன், கடிதத்தில் முன் பகுதியில் புதுமைப்பித்தன் அருமையான கதை-என் கதை யை எழுதியிருந்தார். அந்தக் கதை இங்கு தேவையில்லை. கடிதத்தின் பிற்பகுதியில் அவர் எழுதியிருந்த வரிகள்... "....சகு, நான் உனக்கு வேறு என்னத்தைச் சொல் லப்போகிறேன். ' பிடி உன் கையிலிருப்பதால் தானே