பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"புதுமைப்பித்தன்' 173 சுமார் நூறு மொழிபெயர்ப்புக் கதைகள் எழுதியிருக்கிறார். பத்துப் பதினைந்து பாடல்கள் எழுதியிருக்கிறார். எத்தகையோ விமர்சனங்களும், நூற்றுக்கு உட்பட்ட கட்டுரைகளும், ஒன்றிரண்டு ஒற்றையங்க நாடகங்களும், மூன்று சினிமா வசின ழம், நாவல் என்ற அச்சத்துக்குப் பொருந்தாத சில நெடுங் கதைகளும், அபூர்ணமாக நிற்கும் நாவல்களும் சினிமா கதை களும், வேறு பலவும் எழுதியிருக்கிறார், ஆனால் அவரது சிருஷ்டிகளில் பெரும்பாலானவை சமீபகாலத்தில் தான் புத்தக உருவில் முறையாக வெளிவந்து கொண்டிருக் கின்றன. அவரது சகல சிருஷ்டிகளும் வெளிவந்த பின்னர் தான் அவரைப் பற்றிய பரிபூரணமான விமர்சனத்தை நான் எழுத முடியும்; . அப்போதுதான் வாசகர்களுக்கும் அது புரியும், புதுமைப்பித்தன் பற்பல விதமான இலக்கிய சிருஷ்டி களிலும் பற்பல பெயர்களிலும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும்கூட, அவரது மற்றப் பெயர்களை விட, இயற் பெயரையும்விட, பிரசித்தமும் பெருமையும் பெற்றது ‘புதுமைப்பித்தன்' என்ற புனை பெயர் தான்; அவரது மற்ற இலக்கியங்களை விட , பேரும், புகழும், பிரசித்தமும், உயர்ந்த ஸ்தானமும் பெற்றவை அந்தப் 'புதுமைப்பித்த னின் கதை கள் தாம். ஏனெனில் புதுமைப்பித்தனின் மேதாவிலாசம், சுவானுபூதியான கற்பனை வளம், அகண்டமும் ஆழமும் நிறைந்த சிந்தனை முதலியன எல்லாவற்றுக்கும் அவரது கதைகள்தாம் சிறந்த உரைகல்லாக, உலகமறிந்த பிண்டம் பிராமங்களாக ' நம்முன் விளங்குகின்றன. புதுமைப் வித்தனின் கதைகள் விஷயத்துக்குப் பின்னர் வரலாம். . இன்று. தமிழ் நாட்டாரால் சிறந்த சிறுகதை இலக்கிய கர்த்தா என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் புதுமைப் பித்தன் - உயிரோடிருந்த காலத்தில் அவருக்கு இலக்கிய உலகில் நண்பர்களைவிடப் பகைவர்களே அதிகம். ஆனால் அந்தப் பமைமைக்குப் புதுமைப்பித்தனின் கதைகள் பிரதான ஹான காரணம் அல்ல; - புதுமைப்பித்தன் சொல்லும் அபிப் பிராயங்கள், எழுதும் மதிப்புரைகள், விமர்சனங்கள் முதலியனவே' இதற்குக் காரணம். ஆனால் அபிப்பிராயம்