பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் மதிப்புரை எழுதியிருந்த புதுமைப்பித்தன் ஒரே வரியில் அந்தப் புத்தகத்தைத் தகர்த்து விட்டார்: இது காப்பி அல்ல; சிக்கரிப் பவுடர்! இதுபோலவே 'அவர் தழுவல். இலக்கியத்தைத் தாக்கி எழுதுவார், ஆனால் தழுவல் என்று சொல்லாமலே திருடுபவர் களைப் பற்றி, அவர் ஒரு முறை *சமீபத்தில் சிலர் சூரியனைத் தாக்கிச் சட்டைப்பையில் போட்டுக்கொள்ளும்'. முயற்சியைத் தழுவல் என்கின்றனர். அது வெறும் திருட்டு!” என்று எழுதி விட்டார். திருட்டு இலக்கியம் சிருஷ்டிப்பவர்களைக் கண்டால் தான் புதுமைப்பித்தன் நெற்றிக் கண்ணைத் திறக்கும் பித்தனாக மானுலார். 'ரசமட்டம்' என்ற புனைபெயரில் அவர் ". தினமணி” வில் எழுதிய கட்டுரைகளும், 'இரவல் விசிறி மடிப்பு' என்ற தலைப்பில்' * தினசரி' யில், 'பில்ஹ ணன்' என்ற நாட. 45 நாலுக்கு அவர் எழுதிய மதிப்புரையும் புது 5மைப்பித்தன். திருட்டு இலக்கி யத்தைத் தாக்கி , எழுதிய தற்குச் சரியான உதாரணங்கள். திருட்டு இலக்கியம் சிருஷ்டிப்பவர்களைப் பற்றிப் புதுமைப் பித்தன் பின்வருமான குறிப்பிடுவார் : இன்னொருவன் கதையைத் திருடி, தன் சொந்தக்கதை sெ:ன்று கூசாமல் சொல்லும் பொய்யர்களை, சோரம் போன மனைவிக்குப் பிறந்த குழந்தைக்குத் தான் தான் தகப்பன் 61ன்று கூறிக் கொள்ளும் வெட்கம் கெட்டவருக்குத்தான் ஒப்பிடலாம்!” புதுமைப்பித்தன் மதிப்புரை விஷயத்தில்' இவ்வளவு காரசாரமா யிருப்பதுபோல், ஆசிரியர்களைத் தமிழ் நாட்டு பெர்னாட்ஷா, தமிழ்நாட்டு மாப்பஸ் என் என்ற ரீதியில் ஒப்பிட்டுக் கூறுபவர்களையும். எ.டுத்ததற்கெல்லாம் பிற நாட்டு இலக்கியங்களோடு ஒப்புநோக்கும் பேர்வழிகளையும் அவருக்குப் பிடிக்காது. ஏன் அது மேல்நாட்டுடன் ஒப்பிட வேண்டிய காரியமோ தெரியவில்லை. நம்மூர் நாயர் ஓட்டல் இட்லியையும் ' பரமசிவம்பிள்ளை. ஓட்டல் தோசையையும் ஓஹன்ட்லி பாமர்ஸ் பீஸ்கோத்துடன் வெற்றி தரமாக ஓப்பிட்டு வெளிவரும் கருத்துக்களைக் காணப்பெறும்