பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புதுமைப்பித்தன் கொண்டு வருகின்றன. இப்படிப்பட்டதொரு மயக்க நிலை யைப் போக்க, சற்றுக் காரமான கருத்துக்கள் வெளியிடப் படு வது குற்றமல்ல, நல்ல இலக்கியமென்றால், எத்தனை நந்திகள் வழி மறித்துப் படுத்துக் கொண்டாலும் அவை உரிய ஸ்தா னத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குரு வின் டேர்களைப்போல் எத்தனை பேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டை பாகி விடாது. மதிப்புரை எழுதுகிறவனிடம் எதிர்பார்க்க வேண்டியது ஒன்றுதான், நல்ல இலக்கியத்தைக் காணும் பொழுது அதைத் தெரிந்து கொள்ளவும் பரிசயம் செய்து வைக் கவும் அவனிடம் திராணி வேண்டும் அப்படியே, போலியைக் காணும்போது யார் வந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் அது போலி என்று சொல்வதற்கு நெஞ்சழுத்தம் கொண்டி சூக்க வேண்டும். அது போதும். . புதுமைப்பித்தனின் மதிப்புரையால் எந்தக் கெடுதலு மில்லை என்பதற்கு எத்தனையோ நந்திகள் வழி மறித்தும், இன்று அவரது கதைகள் பேரும் புகழும் பெற்று நாடெங்கும் ஒலிப்பதே நல்ல அத்தாட்சி. இருக்கட்டும். புதுமைப்பித்தன் வேளூர், வெ. கந்தசாமிக் கவிராயராக அவதாரம் எடுத்தது 1944-ம் வருஷம். அதற்கு முன்பும் அவர் ஒன்றிரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். எனினும் தாம், எழுதப்புகும் புதுமுறைப் பாடலுக்காக அவர் தமது புனை பெயரையும் மாற்றிக் கொண்டார். பாட்டுக்காக மட்டும் தான். வேளூர். வெ. கந்தசாமிக் கவிராயர். என்று ஒருவர் எழுது வதை, அதிலும் மிகவும் புதுமையாக எழுதுவதைக் கண்ட ரசிகர்கள் “இவர் யார்?' என்று திகைத்தார்கள். சாதாரண மாக நமது நாட்டில் 'பித்தன்', 'சித்தன்', 'பிரியன்' என்ற புனை பெயர்கள் தான் நடமாடுவதுண்டு. 3. ஹென்றி போன்று விலாசத்துடன் கூடிய ' புனைபெயர்கள். புகவில்லை. எனவே புதுமைப்பித்தன் ஊர், விலாசம், பெயர் எல்லாம் அமைந்த ஒரு. பூதிய புனைபெயரை உண்டாக்கியதால் அவர் யார் என்று