பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புதுமைப்பித்தன் பலருக்கு வெகு நாட்களாகத் தெரியாதிருந்தது. வேளூர். வெ', கந்தசாமிப்பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது முதல் பாட்டு 'ஓடாதீர்!' என்பது இது *கிராம ஊழியன்' பத்திரிகை யில் வெளிவந்தது. பாட்டு வெளிவந்த காலத்துக்கு முன்னர் தான், கு. ப. ரா. காலமாகியிருந்தாள். அவரைச் செத்த பிறகு கவனிக்க முனைந்த, நிதி சேர்க்க முனைந்த தமிழர்களின் நிலையைக் கண்டு பாடிய பாட்டு அது என்றுதான் சொல்ல வேண்டும், கு. ப. ரா. செத்து விட்டார்; அவரது குடும்பத் துக்கு நிதி திரட்டப்பட்டது. எழுத்தாளனைச் சாக விட்டுக் கெளரவிப்பதைக் கண்டு மனம் புழங்கினார் புதுமை பித்தன். இத்தனைக்கும் மேலே இனி:ஒன்று; ஐயா, நான் செத்ததற்குப் பின்னால் விதிகன் திரட்டாதீர்! நினைவை விளிம்டி கட்டி கல்லில் வடித்து வையாதீர்!

  • {27னத்து அரன்

வந்தான் கீ பண்ண வந்தது போல் போனான் காண்' என்று புலம்பாதீர்! அத்தனையும் வேண்டாம் அடியேனை விட்டுவிடும்!. இது பாட்டின் ஒரு பகுதி. ஆனால், நாம் புதுமைப் பித்தனையும் சாகவிட்டுத்தான் கெளரவிக்கிறோம். அவர் பாட்டு நமக்குப் புத்தி கற்பிக்கவில்லை; 'எதிர்காலத்திலாவது பலன் 'அளிக்கட்டும்! பாட்டின் கருத்து இருக்கட்டும். இந்தப் பாட்டு சிலருக்குப் பாட்டாகவே தோன்றாமல் இருக்கும். இதுவும்