பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 புதுமைப்பித்தன் கதி; சோழ சாம்ராஜ்யத்தின் மிடுக்கைக் கோடிட்டுக் காட்டும் அரண்மனையின் ஆசார வாசல் வருணனை, நாகரிக யுகத்தின் கசப்புக் குரல் - இந்த நான்கையும் வெவ்வேறு சுருதியில், அதாவது கதையின் கருத்துக்கு இசைந்த சுருதியில், நாம் கேட்பது புலப்படும். இந்த மாதிரியான ரசபாவக் கவலைகளை வேறு எந்த வசன கர்த்தாவும் இதுவரை தமிழில். கொண்டுவர தில்லை . எனது நண்பரும் அரிய இலக்கிய ரசிகரும் எழுத்தாளரு 1தான கு. அழகி ரிசாமி புதுமைப்பித்தனைப் பற்றிப் பின்வருமாலு எழுதியிருக்கிறார் : - *"இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் பாரதி : தமிழ் வசனத்துக்குப் புதுமை யும் புத்து இரு ம் கொடுத்தவர் புதுமைப்பித்தன். ஆனால் பாரதிக்கு முன் தமிழில் மிகச் சிறந்த கவிச் செல்வங்கள் இருந் தன; புதுமைப்பித்தனுக் குமுன் மிகச் சிறந்த வசனச் செல்வங் ஆள் இருந்தன என்று சொல்ல முடியாது. புதுமைப்பித்தன் தமிழ் நாட்டு வசன இலக் கியத்தின் சொத்து.. அவர் வசன இலக்கியத்தின் (Obserர். இந்த அபிப்பிராயத்தை : நான் நாவலித்து வரவேற்ப தோடு, புதுமைப்பித்தனின் கதையிலேயே ஆழ்த்து விட்ட ரசிகர்கள், இனிமேல் அவரது வசனத்தையும் கவனித்துப் பார்க்கவேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். வசன இலக்கியத்தின் மன்னராக விளங்கிய புதுமைப் பித்தன் சிறு' கதை இலக்கியத்திலும் தனிக் காட்டு ராஜாவா கத்தான் விளங்கினார்; அந்தப் பெருமையை அவர் - நிலை நாட்ட டியும் விட்டார், சில வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் புதுமைப்பித்தனி டம் வந்து, “'ஸ் மர். தமிழ் நாட்டின் சிறந்த சிறு கதைகளாகப் பன்னிரண்டு கதைகளைப் பொறுக்கி: ஆங்கிலத்திலும் ஹிந்தியி லும் வெளியிடலாம் என்று - எண்ணம், நம் நாட்டு மேதைகள் வெளிநாட்டிலும் பிரப்பமடைய வேண்டும் அல்லவா?. ஆகவே' அந்தப் பன்னிரண்டு . க ைத