பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புதுமைப்பித்தன்' களையும் பொறுக்கித் தரவேண்டியது உங்கள் பெச றுப்பு என்று கேட்டுக் கொண்டார். . அதற்குப் புதுமைப்பித்தன் சொன்ன பதில் இதுதான்: “'இறந்த சிறுகதைகளைப் பொறுக்கி எடுக்கவா? என்னுடைய கதைகள் பன்னிரண்டைத்தான் பொதுக்க வேண் டும்! .. - வந்த ஆசாமிக்கு முகம் கறுத்தது. கொஞ்சம்கூட அடக்க இல்லாமல், “அஞ்சுவது அஞ்சாமல்' துணிந்து சொல்கிறாசே என்று நினைத்தாரோ என்னவோ? சிறிது நேரம் வேறு எதை யெதையோ பேசிக்கொண்டிருந்து விட்டுப் போய்விட்டார், புதுமைப்பித்தனின் இந்தப் பதில் அவரை மட்டும் திடுக்' கிட வைக்காது. பல எழுத்தாளர்களையும் உங்களையுமே திடுக் கிட வைக்கலாம், ஆனால் தம்மிடமுள்ள நேர்மையான திறமையை 'நேரடியாகச் சொல்வதற்குப் புதுமைப்பித்தல்* எப்போதும் கூசிமாட்டார், தமிழில் புதுமைப்பித்தன் மட்டும் கதைகள் , எழுதவில்ஆதி . எத்தனையோ பேர்கள் எழுதித்தான் வருகிறார்கள். ஆனால், மற்றவர்களின் கதைகளில் பெரும்பாலானவை இல்லாத ஊரின் இலுப்பைப்பூச் சரக்குகள் தாம். புதுமைப்பித்தனோ அப்படியல்ல. அவரது கதைகளோ பிறர் எழுதிய கதைகரை விடப் பன்மடங்கு உயர்ந்து, எவரெஸ்ட் சிகரம்போல் திமிர்ந்து நிற்கின்றன. மேலும், அவருக்கே உரிய தணித் தன்ம்ை அவரை எழுத்தாளர்கள் கூட்டத்தின் மத்தியில் தனித்ததொரு தீபஸ்தம்பம் மாதிரி இரக்கி நிறுத்தி விட்டது. கதைகள் மட்டுமே எழுதி ஒரு எழுத்தாளன் சாகரம் பெற்றுவிட முடியுமா என்ற சந்தேகம் சிலருக்கு அர்த்தமற்று எழுவதுண்டு. “'புதுமைப்பித்தன் - சிறுகதைகள்தானே எழுதி யிருக்கிறார். அவருடைய மகாமேதையை உணர்ந்துகொள்ள அவரை ஒரு நாவல் எழுதச் சொல்லுங்கள் என்று ஒரு எழுத்தாள நண்பர் என்னிடம் கூறினார். புதுமைப்பித்தன் ' நாவல் எழுதவும் முளைத்ததுண்டு. * அன்னையிட்ட தி' என்று