பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் ம றின் அமரராகி விட்ட தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களின் வாழ்வையும் பணியையும் பற்றிய நினைவுக் குறிப்புக்களைச் சேகரித்துச் சேமித்து வைக்கும் நல்லதொரு பணியைத் திருச்சி வானொலி நிலையத்தார் ஆற்றி வருகின்றனர். அத்தகைய எழுத்தாளர்களின் இலக்கியப் பணியை நன்ச,றிந்துள்ளதோடு அவர்களை நேரில் அறிந்து நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்ற எழுத்தாளர்களைத் தக்க இலக்கிய அன்பர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டு பேட்டி காணச் செய்து, அவர்கள் தமது வாய்மொழியாகக் கூறும் நினைவுக் குறிப் புக்கனை வானொலி நிலையத்தார் ஒலிப்பதிவு செய்து வருகின் றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் பேட்டிகளுக்குக் கால். வரம்பு ஏதும் இல்லை. பேட்டி எவ்வளவு நேரம் நீடித்தாலும், அதனை முழுவதும் பதிவு செய்து கொள்கின்றனர். இல்வாறு - பதிவு செய்யும் ஒலிப்பதிவைச் சுருக்கித் தொகுத்து, அமரராகி' வீட்ட குறிப்பிட்ட , எழுத்தாளரின் நினைவு நாளை ஒட்டி ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய பின்னர், பதிவு செய்யப்பட்ட பேட்டி முழுவதும் ஒலிப்பதிவை '4ம் வருங்காலத் தலைமுறையினருக்காசு, ' வானொலியின் ஆவணக் காப்பகத்தில் பத்திரப்படுத்தி வைத்து வருகின்