பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20} புதுமைப்பித்தன் நரை புரைவோடிருந்தது. வாழ்க்கை நெருப்பில் அடி..பாட்டுக் காய்ந்த முகம்; வயதுக்கு மீறிய முதுமை; நோஞ்சான் உடம்பு. தொளதொளத்துத் தொங்கும் வெள்ளைக் கதர் ஜிப்.பாதான் உடம்பின் சோனித் தன்மையை மூடி மறைத்திருந்தது. அவரது தோற்றம் பற்றிக் குறிப்பிடும்போது கண்களைப்பற்றிக் கு திப்பிட்டாக வேண்டும். அந்தக் களைகள் ஓர் அசாதாரின் மான ஒளி நிறைந்த கண்கள். தீராத ஏக்கமும் பித்தமும் "ஒணி 4ம் தீட்சண்யமும் தென்படும் கண்கள். அந்தக் கண்களை வெகு நேரம் பார்க்க முடியாது. பார்க்கிறவர்களின் கண்களைச் சீக்கிரம் உறுத்திவிடும் கண்கள் அவை. ஆழக் குழிக்குள் அமிழ்ந்து கிடந்தாலும் தெறித்துச் சிதறும் ஒளியும் வேக மம் கொண்ட கண்கள் அவை. அவரை அறியாதவர்கள் முதலில் அவர் கண்களைச் சந்தித்தால், அது அவர்களுக்கு .ஏதோ ஓர். இளந் தெரியாத அச்சத்தை எழுப்பிவிடும் என்று கூடச் சொல்லலாம். கேள்வி: சரி, அந்நாட்களில் அவரது ஈடுபாடுகள் என்ன? அவரு டைய படிப்பு-Reading-எழுத்து, சமூக அக்கறைகள், லட்சி யநீர்கள் --இவை பற்றிச் சொல்ல முடியுமா? பதில்: . நான் அவரைச் சந்தித்துப் பழகிய காலத்தில் அவர் * தின சரி'ப் பத்திரிக்கையையும் விட்டு விலகி, சுயேச்சை எழுத்துன ராக, Free Marce writer ஆக மாறியிருந்தார். அதே சமயம் சினிமாத்துறையிலும் காலடி வைத்து 'அவ்வையார்" படத் துக்குக் கதை வசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்; இதற்கிடையிலும் அவர் சில கதைகள் எழுதினார். 'அன்றிரவு”

  • எப்போதும் முடிவிலே இன்பம்', 'கபாடபுரம்' அவரது கடைசி

கதை எனச் சொல்லத் தகும் “ கயிற்றரவு'. முதலிய கதைகள் எல்லாம் அப்போது எழுதி வைத்தான், இந்தக் கதைகளின் தன்மையே 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளை எழுதிய புதுமைப்பித்தனின் ஈடு பாடுகள் வேறு, இந்தக் கதைகளை எழுதிய புதுமைப்பித்தனின் ஈடுபாடுகள் வேறு என்பதைப் புலப்படுத்தி விடும்,