பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுயத்தம் படிப்பு--reading-- ஐப் பொறுத்த வரையில் எப்போதுமே அவருக்கு அதில் ஒரு தணியாத தாகம் இருந்தது. சொந்தத்தீ லேயே ஏராளமான புத்தகங்கள் வைத்திருந்தார். இதுபோக, கையில் பணம் புரள்கிற வேளையில், புத்தகக் கடைக்குள் துழைந்து விலையைப் பாராமல் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வருவதும் உண்டு. வாங் கிய புத்தகங்களை வாங்கிய சூட்டோடு படிக்கவும் செய்வார்; மாதக் களைக் கில் படிக்காமல் போட்டும் வைப்பார். ஆனாலும், தனியாக இருந்தால் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டுதான் இருப்பார். எனினும் படிப்பவஜ் துக்கு ஒரு வரன்முறை கிடையாது. அது கம்பனாகவும் இருக்கலாம்; கண்ணுடையம்மன் பள்ளாகவும் இருக்கலாம். Arabian Nights ஆகவும் இருக்கலாம், அல்லது அன் மையில் வெளிவந்த, 4, 8, ஆடனின் கவிதைத் தொகுப்பாகவும் இருக் கலாம். படிப்பு விஷயத்தில் அவருக்குப் பழைய' இலக் கியங் களிலும் ஈடுபாடு இருந்தது; புதிய நூல்களிலும் ஈடுபாடு இருந்தது. புதிய இலக்கியங்களில் அவர் டி.எஸ். எலியட், {{N. +. ஆடன், கிறிஸ்டபர் இஷர்வுட், லூயி மக்னீஸ், N. S. பிசிச்செட் மற்றும் பலரது புத்தகங்களை நான் பழகிய காலத்தில் அரங்கிப் படித்ததுண்டு. - நான் அவரோடு பழகிய காலத்தில் அவர் சமூக அக்கறை களைப் பற்றிப் பிரமாதமாகக் கவலை கொண்டார் ' என்றோ, அவை பற்றிச் சிந்தித்தார் என்றே சொல்ல முடியாது. ஆனால் சமூகத்தில் காணும் சிறுமைகளைக் கண்டு வருந்தும், மனம் குமையும், சிண ந்து சீறும் குணம் அவருக்கு என்றும் இருந்தது. ஆனால் இந்த உணர்வு பெரும்பாலும் மனம் புழுக்கத்துடனேயே நின்று விட்டது எனலாம், லட்சியங்களைப் பொறுத்த வரையில், உலகில் தாம் இன்னின்ன கதைகளை, நாவல்களை எழுதி முடிக்க வேண்டும் என்று அவர் கூறிய நிறைவேறாத, நிறைவேற்றுவதற்கான வாய்ப்போ வசதியோ, அதற்கான மனஉறுதியோ திட்டமோ எதுவுமே இல்லாத ஆசைக் கனவுகளாகவே இருந்து வந்தன எனலாம்.' 4. பி,-13