பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலுபந்தம் எவரையும் ஒட்டுமொத்தமாகப் பாராட்டிவிட மாட்டார்; சில வற்றைப் பாராட்டவும் செய்வார். சிலவற்றை இடதறித் தன்ளவும் செய்வார், என் விஷயத்திலும் அழகிரிசாமி விஷயத் திலும் அப்படித்தான். எனினும் ஒரு முறை எங்களை ஒரு கஞரிடம் அறிமுகப்படுத்தும்போது... *இவர்கள் இருவளும் என் எதிர்கால நம்பிக்கைகள் என்று குறிப்பிட்டார். கேள்வி; சுவையான சம்பாஷணைக்காரர் என்று அவரைப்பற்றிக் கூறப்படுகிறது. அவருடைய சம்பாஷணை யில் சுவை ஏறக் காரணம் என்ன? ஹாஸ்பமா? கிண்டலா? சோரல் பார்வையா? அவருடைய பார்வையினாலே .அவர் தொடும் விஷயத்தின் தளம் மாறி விடுகிறதா? விஷயத்தில் சுகம் என்ற வேண்டும் என்பதற்காக Facts-ஐத் திரித்தல், மிகைப்படக் கூறல் ஆகிய யுக்திகளை அவர் கையாள்வாரா? அதாவது முதன்மையான நோக்கம் பேசும் நேரத்தில் நண்பர்கள் மத்தி வியில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதா? அல்லது உண்மை நிலையில் சிறு சிதைவும் ஏற்படக்கூடாது என்பதா? பதில்: ஆமாம். புதுமைப்பித்தன் சுவையாக உரையாடக்கூடியவர் தான். பேசுவதற்கு இதுதான் விஷயம் என்ற நியதி ஏதும் அவருக்குக் கிடையாது. பழைய இலக்கியம், புதிய இலக்கியம், வைத்தியம், சோதிடம், தத்துவ விசாணை, ஊர்வம்பு-எது வேண்டுமானாலும் பேச்சுக்குரிய விஷயமாகிவிடும் அவருக்கு. அவரது சம்பாஷணை - சுவையாக இருப்பதற்கு முதற் காரகனம் அவர் பேசுகின்ற விஷயத்தை ஈடுபாட்டோடு பேசுவார். அவர் பேசுகின்ற பாணியைப் பார்த்தால், அவர் அந்த விஷயத்தில் அத்துபடியானவர் போன்ற ஓரு மயக்கம் தோன்றும். பொது வாக விஷயத்தைத் திரித்துக் கிடற முயல மாட்டார். ஆனால் தனது கருத்தை அழுத்திக்கூற மிகைபடக் கூறுவதுண்டு, அவரது பேச்சின் முதன்மையான நோக்கம் பேசிக் கொண் 4.ருக்கும் நண்பர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதைவிட, எதி