பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் விளையாட்டுத்தனமான குறும்பும் வேடிக்கையும்: ரவை மாதிரி புரளும். ஆனால் அவர் விளையாட்டு மனிதரல்ல, அவர் சீரிய ஸாகப் பேச முனைந்தால் சிவன் ருத்ராவதாரம் எடுத்த மாதிரியே இருக்கும் என்று சொல்லலாம். ருத்ர தாண்டவம் மாதிரி வானையும் மண்ணையும் அளந்து பாயும் வார்த்தைப் பிரயோகங்களோடு விஷயங்கள் அருவி மாதிரி கொட்டுவதும் உண்டு. அவரது மனோ நிலை விரக்தியுற்றிருக்கும் பொழுதில் தான், வார்த்தைகளில் கசப்பும் கைப்பும் அதிகமாகப் புரை யோடி யிருக்கும். மற்ற வேளைகளில் அவரோடு பழகுவதும் பேசுவதும் இன்பானுபவமாகவே விளங்கும். ' ' ' நீங்கள் அவருடன் பழகும் காலத்தில் அவருடைய உடல் நிலை எப்படி இருந்தது? ஆரோக்கிய நிலையில் அப்பொழுதே இறை இருந்ததாக உணர்ந்திருந்தீர்களா? . , நான் பழகத் தொடங்கிய காலத்தில் அவர் உடல் நிலை மோசமில்லை. ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அவரை எப்போதா வது கொடிய இருமல் வாட்டி வதைத்ததுண்டு. இரும ஆரம் 1பித்தால், விடாமல் கண்ணிலிருந்து கண்ணீர் தெறிக்கிறவரை இருமுவார். பிறகு, மூச்சு வாங்குவார். கேட்டால், 'இன்னைக்கு வெளியிலேயே ரொம்ப நேரம் அலைந்து விட்டேன் பாரு” என்றே , 'உன்னோடு சேர்ந்து நேற்று சிகரெட்டை ஊதித் தள்ளினேன் பாரு' என்று ஏதோ காரணம் சொல்வார். அந்த இருமலை அவரும் க்ஷயரோகம் என்று சந்தேகிக்கவில்லை அவ ரோடு நெருங்கிப் பழகிய என் போன்ற நண்பர்களும் சந்தே கிக்கவில்லை. காரணம் கூடியத்திற்குரிய சாதாரண அறிகுறிகள் கூடத் தென்படாததுதான். எனினும் ஒரே ஒரு முறை அவர் இவ் வாறு கொடூரமாக இருமி முடித்த பிறகு, என்னைப் பார்த்து “என்ன ராசா! ஒருவேளை என்னைச் சாவு' துரத்திக் கொண்டு வருகிறதோ? அப்படி ஒரு பயம் தோன்றியிருக்கிறது எனக்கு” என்று சொன்னார், அப்போதும் நான் அலருக்கு "உகீரைக் குடிக்கும் காச நோய் பற்றியிருப்பதாகக் கருத