பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 231 சினிமாத்துறையில் நுழைவதற்குப் பொருளாதாரம்தான் முதற்காரணம் என்பது மட்டுமல்ல, அதுவே முழுக்காரணமும் கூட மற்றப்படி அவருக்கு அந்தக் கலைச்சா தினத்தில் தனித்த ஈடுபாடு எதுவும் கிடையாது. தமது போக்குக்கும் எழுத்துக்கும் அந்தத் துறையில் ஒத்து வராது என்று அவருக்குத் தெரியும். எனவே அவர்தான் அந்தத் துறையின் போக்குக்கு ஒத்துப் போங் சினிமாவுக்கு எழுத முற்பட்டார்.

  • சோதனை' என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க

வேண்டும் என்று அவர் யோசித்ததாக எழுதி இருக்கிறீர்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால், அதனை ஆரம்பித்திருப் "பார். என்று கருதுகிறீர்களா? அல்லது அது எழுத்தாளரின் வழக்கமான கனவுதானா? சினிமாவில் வரும் வருவாயைக் கொண்டு, தமது ஆத்ம சாந்திக்காக அவர் 'சோதனை' என்ற பெயரில் ஒரு பத்திரி கையை நடத்தத் திட்டமிட்டது உண்மைதான். அந்தப் பூ.5,த். திரிகை இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று அவர் என்னோடும் அழகிரிசாமியோடும் யோசனை கள் கூ றிப் பேசியது தும், உண்டு. அவர் நினைத்தபடியே. சினிமாத் துறையில் நிறையப் பணம் தொடர்ந்து வந்திருந்தால், அவர் அந்தப் பத்திரிகையை! நிச்சயம் ஆரம்பித்திருப்பார். அப்படி ஆம் பித்திருந்தால் ' அது . நிலைத்திருக்குமா, நீடித்திருக்குமா என்பது வேறு விஷயம். என்றாலும், அவர் தமது கதைகளை, கருத்துக்களைத் தடையின்றிச் சுமந்து செல்ல, ஒரு வாகனம் வேண்டும் என்று விரும்பியது உண்மை . அந்த அளவில் அது அவரது ஆசைக் கனவில் ஒன்றாகவே இருந்தது, ஆனால் அவரது ஆசைக் கனவுகளில் பலவும் கருகியதுபோல் அதுவும் கருகிவிட்டது. அவ்வளவுதான்,