பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் சனம் தான். இதேபோல் இதற்கு முன் 'ரசமட்டம்' என் நீர் புனை பெயரில் அவர் 'கல்கி', எழுதியுள்ள" கதை கள் பல வற்றுக்கு மூலாதாரம் மேலை நாட்டுக் கதைகள்தான் குறிப் பிட்டு, ஒரு பெரிய கட்டுரைப் போரே நடத்தினார். இவ்வாறு திருட்டு இலக்கியம் படைப்பவர்களைப் பற்றி, “இன்னொருவன் கதையைத் திருடி, தன் சொந்தக் கதையென்று கூசாமல் உரிமை - கொண்டாடிக் கொள்பவர்களை, சோரம் போன மனைவிக்குப் பிறந்த பிள்ளைக்குத் தான் தான் தகப்பன் என் கூறிக்கொள்ளும் வெட்கம் கெட்டவர்களுக்குத்தான் ஒப்பிட லாம் என்று ஒருமுறை கூறினார் புதுமைப்பித்தன், கேள்வி: துடுக்குப் பேச்சால் நண்பர்களையும் சில சமயம் அவர் புண்படுத்தி விடுவார் என்று சொல்லப் படுகிறது. இது உண்மைதானா? அல்லது தகுதியானவர்களுக்குத்தான் அந்த வெகுமதி கிடைக்குமா? ' பதில் : புதுமைப்பித்தன் கூறும் விமர்சனம் அல்லது Comment எப்போதும் கூர்மையாகவே இருக்கும். அது அவர் இயல்பு. பொதுவாக அதில் வன்மம் இருக்காது. அவரை அறிந்தவர் - கள். அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்; அறியாதவர்கள் அவரை நெருங்கவே அஞ்சுவார்கள். எனினும், பொதுவாக மாய்மாலக்காரர்கள், போலிப் பெருமை பாராட்டுபவர்கள் "போன்றவர்கள் விஷயத்தில்தான் அவர் மிகவும் காரசாரமான வார்த்தைகளைப் பிரயோகிப்பார். அவருக்குப் பிடிக்காதது போலித்தனம். எனவே அத்தகையோர் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளத் தவறமாட்டார்கள். : உதாரணமாக, என் னோடு வேலைபார்த்து வந்த இன்னொரு எழுத்தாளரிடம். கட் டுரை கேட்டுப் போவதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் வத் திருந்தார். அப்போது புதுமைப்பித்தனும் அங்கிருப்பதைப் பார்த்து உபசாரத்துக்காக, "நீங்களும் ஒரு கதை எழுதித் தாருங்களேன் என்று அவர் கேட்டு விட்டார். அந்தப்