பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் பொருளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மேலும் ஓரன ஐ நாத்திக வாடை வீசும் Rationalist கருத்துக்களும், Materialist கருத்துக்களும் சற்று ஆழமாகவே வேர்பாய்ச்சியிருப்பதையும் காணலாம். எனவே அத்தகைம் கருத்துக்கள். அந்தக் காலத் தீல் அவரது கவனத்தைக் கவர்ந்திருந்தனர் என்று ஊர ஓக்க இடமுண்டு. சமுதாக்க மாற்ற வேண்டும் என்று உணர்ந்த வர்தான். அவர், அந்த உணர்வு இல்லாவிட்டால். அவரது கலதகளில் 'சமுதாயப் புன்மைகளைக் கண்டு கொதிக்கும் அத்தனை வேதனை பிரதிபலித்திருக்காது. ஆனால் எந்த விதமான சிந்தனை அல்லது போராட்டங்கள் - அந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் கடைசி வரை தெரிந்து கொண்ட தாகவோ, புரிந்துகொண்டதாகவோ, அதுபற்றி அவர் ஈன் நம் ஆழமாகச் சிந்தித்ததாகவோ தெரியவில்லை. . . கேள்வி: தமது இலக்கியக் கருத்துக்கள் ' பற்றி அவர் விரிவாக எழுதி வைக்க வில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், நேர் முகப்பேச்சில் அவர் இது பற்றி உங்களிடம் கூறியிருக்கி (ரா? அவருடைய இலக்கிய நம்பிக்கைகள் என்ன? இலக், கியம் சமுதாய மாற்றத்துக்கான ஒரு கருவி --மிக மேம்பட்ட ஹணுக்கமான கருவி-என்றே வைத்துக்கொள்வோம். அவர் அவ்வாறு எண்ணினா அல்லது தமது பார்வையில் சமூகத் 20 தப் பிரதிபலித்தால் மட்டும் போதும் என்று எண்ணினாரா? பதில்: புதுமைப்பித்தன் , எழுதிய கட்டுரைகள் குறைவுதான். நிறையக் கதைகள் எழுதவேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் காலக்கிரமத்தில் வரவர அவர் கதைகள் எழுதுவதும் குறைந்து கொண்டுதான் வந்தது. காரணம், வயிற்றுப் பிழைப்புக்குத் தினசரிப் பத்திரிகைத் தொழில் என்று ஆனபிறகு, ஆலைவாய்க் கரும்புச் சர்க்கரையாய்த் திரும்பிவந்த நத்துமைப்பித்தன் . அ திகம் எழுதியிருக்க - முடியாதுதான்,