பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளநீரும் இலக்கியமும் தார்கள், புதுமைப்பித்தனுக்கோ அந்த அறைதான் பாச.ை அங்குதான் பெரும்பாலும் அவரைக் காண்" லாம். அந்தப் பாசறைக்கு உரியவர்கள் யாராயிருந்தார் லும் சரி, அதன் தளபதி புதுமைப்பித்தன்தான். அவர் சொல்வது போலத்தான் அங்குள்ளவர்கள் நடக்க வேண் டும். இது கண்டிப்பு. அறையிலுள்ள நண்பர்களுக்குப் பாயும். படுக்கையும் இருக்கத்தான் செய்தன. இருந்தாலும் புதுமைப்பித்தன் அவற்றை உபயோகிக்க விடமாட்டார், ' * * சுட்டையிலே போற கட்டைதானே!, சும்மா கட்டையிலேயே படுக்க க'வே'*' என்று நண்பர்களை யெல்லாம் ஞானதீட்சை செய்து பனங்கட்டைமீது பள்ளிகொள்ளச்' : சொல்வார்; இல்லையென்றால், தரையில் படுக்கச் சொல்வார். அவரும் படுத்துக்கொள்வார். பிறகு இலக்கிய ஆராய்ச்சி நடக்கும்; அதன்பின், திருட்டு ஆராய்ச்சி நடக்கும். திருட்டு, இலக் கியத் திருட்டல்ல; இளநீர்த் திருட்டு! நண்பர்கள் குடி. யிருந்த அறைக்குப் பின்னால் அழகிய தென்னந்தோப்பு. பட்டுப்போல் பால் நிலவு பொழிவதும் , தென்னையின் கீற்று சலசலப்பதும், கீற்று வழியே நில் வொளி ஒழுகி வடிவதும் இலக்கிய ரசிகர்களான நண்பர் களுக்குப் பெரு விருந்துதான். ஆனால் அந்த விருந்தினால் பசி ஆழமா? புதுமைப்பித்தனுக்கு அந்தக் காட்சி இன் பத்தை விட., இளநீரை வெட்டிக் குடிப்பதில்தான் இன் பம் இருப்பதிகப்ப டும்; பசியும் - ஆறவே ண்டுமே! :' எனவே அந்த இன்பத்தைப் பருதவதற் காகப் புதுமைப்பித்தன் ஆராய்ச்சி - நடத்து : சார், மரத்திலேறி இளநீர்க் குலைகளை வெட்டித் தள்ளினால் தோட்டக்காரன் சத்தத்தில் , விழித் துக் கொள்வான். எனவே அரவமில்லாது இறக்குவதற் காக, இனநீர்க் குலை களைக் கயிறுகட்டிக் கீழே இறக்கும் வித்தையைப் புதுமைப்பித்தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். பிறகு கேட்கவேண்டுமா? 'இரவோடு இர” வாய்த் தேவையான குலைகள் இறக்கப்படும், பிறகு அந்தக் குலைகளை ஆளுக்கொருவராகச் சுமந்துகொண்டு தோப் புக்கு அப்பாலுள்ள வயலுக்குள் கொண்டு சென்று,