பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 - புதுமைப்பித்தன் முன்ன புகார் நகரச் சித்திரத்தை மனத்தில் உருவேற்றிக் கொள் ளாமல், அந்தக் கதையில் அவர் காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றி எழுதியுள்ள வரிகளையும், அந்தக் காலத்துச் சூழ்நிலையை வடித்துக் காட்டும் கற்பனையையும் எழுதியிருக்கவே முடி. யாது, இல்லையா? கேள்வி : தமிழில் வசனம் தோன்றிய பின் எழுந்த இலக்கிய ஆசிசி யர்கள் பற்றி அவர் என்ன அபிப்பிராயங்களைக் கொண்டிருந் தார்? - வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவய்யா, வ. வெ, சு. ஐயர், மறைமலை அடிகள், உ. வே. சாமிநாத அய்யர், திரு. வி. க., டி. கே. சி., பரிதிமாற் கலைஞர், எஸ், வையாபுரிப்பிள்ளை, பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பின்கை ஆகியோர் பற்றி அவருடைய அபிப்பிராயங்களைச் சுருக்கமாகவேனும் கூற முடியுமா? பதில்: பலபேரைப் பற்றிய - அபிப்பிராயங்களையும் கேட்டு விட் டீர்கள். அவற்றைச் சுருக்கமாகக் கூறுவதும் சங்கடமான காரியம். ஆயினும் இவர்கள் எல்லோரையும் பற்றி அவருக்கு அபிப்பிராயங்கள் உண்டு. வேதநாயகம் பிள்ளையை அவர் தமிழ் நாவலின் தந்தை என்றே மதித்தார். ராஜமய்யரிடம் அவர் ஈடுபாடு கொண்டிருந்ததை ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள திலிருந்தே கண்டு கொள்ளலாம். எனினும் ராஜமய்யரின் 'கமலாம்பாள் சரித் திர'த்தை அவர் இதன் முற்பாதி நாவல், பிற்பாதி கனவு" என்று கூறிவிட்டார். பிற்பாதியில் வேதாந்த . விசாரம் கதையின் சுவையைக் குறைக்கிறது. - என்பது புதுமைப் பித்தனின் கருத்து, உண்மையும் அதுதான். மாதவையாவின் குசிகர் குட்டிக்கதைகளை அவர் பாராட்டுவார். எனினும் மாதவைகாவின் கதைகள் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்ததால், , கதைகள் வெறும் உபாக்கியானமாக அமைந்து விட்டன என்பது, புதுமைப்பித்தன் பட்டுக்கொண்ட குறை, வ. வெ. சு. அய்யர்பற்றிப் புதுமைப்பித்தனுக்கு மிக