பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் நிதாணமாக யோசித்து எழுதியவையாகத் தோன்றுகின்றன என்கிறீர்கள். ஆனால் , அவரே சொல்கிறார், * * எடுத்த ' எடுப்பில் எழுதியும் வெற்றி காண்பதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பால் எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்தக் கிடங்கிலிருந்து நான் எப் பொழுதும் எடுத்துக் கொள்வேன் என்று'. ஆம், எந்தவொரு எழுத்தாளனுக்கும் நெஞ்சக் குகையில் கருக்கொண்டு, மணலின். உறுத்தலைத் தாங்க மாட்டாது சுருண்டு சுருண்டு முத்தாக மாறும் சிப்பிப் புழுவைப்போல் பல கதைகள் உரு பாகிவருவதுண்டு. எனவே எழுதும்போது நிதானம் வேண்டு மென்பதில்லை. எழுதுவதற்கு முன் கதையை நெஞ்சில் உருகும் சமைப்பதில் தான் நிதானம் - வேண்டும், இவ்வாறு உருச் சல்பவது ஒரு நாளிலும் நடக்கலாம். ஒன்பது வருஷமும் ஆகலாம். எனவே புதுமைப்பித்தன் அவசரத்தில் எழுதினேன் என்று சொன்னால், கதை யே அவசர கோலத்தில் பிறந்தது என்று அர்த்தமல்ல. அது அவரது நெஞ்சில் வளர்வதற்கு எவ்வளவு காலம் பிடித்ததோ, அது நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், ஒரே Sittingல் எழுதி முடிக்கும் கதையே மிகவும் நன்றாக வாய்த்து விடுவதுண்டு. எனக்கும் இத்தகைய அனுபவம் ஏற்பட்டதுண்டு. கேள்வி : மணிக்கொடிப் பத்திரிகையைச் சிறந்த பத்திரிகையாக அவர் கண்டாரா? அல்லது ஓர் இயக்கத்தின் ஆரம்பமாக எண்ணர் இருந்தாரா? : மரிக்கொடிப் பத்திரிகையை அவர் அந்தக் காலத்தின் . தரமான பத்திரிகையாகவே மதித்திருந்தார், மணிக்கொடிப் பத்திரிகை வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்தி ரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் புதிய பரிசோதனை : களுக்கு இடம் கொடுக்கும், உற்சாக மூட்டும், அவற்றை வர. வேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடை . 'இாது. அவர் தமது காலத்திலேயே" எழுதினார். அன்று மறு :