பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 புதுமைப்பித்தன் நாட்டின் தற்கால இலக்கியங்களில் இலியா இரென்பர்கின் Fall of Paris, வாஸிலி கிராஸ்ம னின் The People dirnmerka! இரண்டையும் அவர் படித்திருந்தார். எனினும் மாக்சிம் 'கார்க்கியின் Mother நாவலை அவர் படித்ததாகத் தெரிய வில்லை , ஈலும் பிற நாட்டும் பிற நாட்டு படுத்தும், இங்கு உட் கதைகளை மொழிபெயர்க்கும்போது அவர் திட்டமிட்டுச் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்ததாகத் தெரிய வில்லை. சொல்லப்போனால், அந்தக் காலத்தில் அயல் நாட்டுக் கதைகளை மொழிபெயர்த்துத் தந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பலரும், தாம் படித்த கதை நன்றாக இருப்பு தாகத் தோன்றினால் அதனை மொழிபெயர்த்து வழங்க வேண் டும் என்ற நோக்கிலேயே செயல்பட்டார்கள் எனலாம். என் குலும் பிற நாட்டுக் கதைகளை அப்படியே தமிழில் அறிமுகப் படுத்துவதன் மூலம் பிற நாட்டு இலக்கிய வளர்ச்சியைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தும், இங்கும் புது முயற்சிகளைத் தூண்டும் பிரக்ஞையும் புதுமைப்பித்தன் உட் பட பலருக்கும் ஓரளவுக்கு இருந்தது என்றே சொல்லலாம், கேள்வி : அவர் இரண்டு வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக் கினர். ஒன்று ஹிட்லரைப் பற்றி. மற்றொன்று முசோலினி யைப் பற்றி. இந்தச் சர்வாதிகாரிகள் பேரில் அவருக்குப் பாராட்டுணர்வு இருந்ததா? அறிமுகப்படுத்தும் நோக்கம் மட்டும்தான் எனக் கொண்டாலும் இவர்களைத் தேர்ந் தெடுக்கக் காரணம் என்ன? ஆம். அவர் ஹிட்லரைப் பற்றியும் முசோலினியைப் பற்றி யும் அவர் இரு வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். எனினும் அவற்றின் தலைப்புக்களே அவர்களை அவர் எப்படி மதித்தார் என்பதை விளக்கி விடும். ஹிட்லரைப்பற்றிய நூலின் தலைப்பு “கட்சிப் தர்பார்': முசோலினியைப்பற்றியதன் தலைப்பு "பேசிஸ்டு ஜடாமுனி.* புதுமைப்பித்தன் ஏகாதிபத்திய விரோதியாகத்