பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் தளலைகளின் முணமுணப்பையும், பாம்பின் வாய்ப்பட்ட எலி :5களின் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் இள நீர் களை வெட்டி வயினரப் பருகுவார்கள், நண்பர்கள். இது அவரது நித்திய கருமம். நண்பர்கள் கூட்டத்தில் புதுமைப்பித்தனுக்கு Subழங்கி தவத்த பெயர் பரமஹம்ஸர். ஏன் தெரியுமா? எப்போது "பார்த்தாலும் உன் [மான உவமேயங் களோகொன் 2-ம் தேசம் செய்வார். இந்த உபதேசமெல்லாம் காலை முதல் இரவு ஊரடங்கும் வரையிலும் தான். அதன்பின் அவர் பரமஹம்சரல்ல-- , திருமங்கை ஆழ்வார்! தேங்காய்த் திருட்டுக்காக அவர் புதிய அவதாரம் எடுத்து விடுவார். இளநீர்களை வெட்டிக் குடித்தவுடன் நேராக அறை 20க் குத் திரும்பி விடுவதில்லை. அப்படிச் செய்வது தரும் விரோ தம் என்பார் புதுமைப்பித்தன், தின்றதும் குடித்ததும் செரிக்க வேண்டாமா? எனவே அவர் நண்பர்களை ஆற்று மணலுக்கு அழைத்துச் செல்வார். தாமிரபருணி ஆற்று மனா ல் சுக நித்திரை செய் வதற்கேற்ற அருமையான நளி னப் பள்ளி. நண்பர் குழாம் ஆற்று மணலில் கண். வள் கும், ஆற்றுக்குச் செல்லாவிட்டால், ஆற்றங்கரையி லுள்ள மாந்தோப்புச் சுடுகாட்டுப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்வார். தின்றது செரிக்க மட்டும் அல்ல; திருப்பள்ளி கொள்வதற்கும் தான்! நண்பர் குழாத்தின ரும் வேறு வழியின்றி இந்தப் 'பித்தனைச் சுற்றி, பூத கணங்கள் போலச் சுடலைக்குச் செல்வார்கள். புதுமைப்பித்தனின் இளமைக் காலம் இப்படித்தான் கழிந்தது: இந்த அனுபவத்தின் சாயையைத்தான் நாம் அவரது "சாயங்கால மயக்கம்' என்ற கதையில் காண் கினோம்,