பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 2zf தான் இருந்தார் என்று முன்னர் சொன்னேன். நாஜிசத்தை யும் பாசிசத்தையும் அவர் எவ்வாறு மதித்தால்? *'சோனி யாக மெலிந்து வந்த முதலாளித்துவம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த பயத்துடன் பெற்றெடுத்த குழந்தைகள் தான் பாசிசமும் நாஜிசமும்” என்று அவரே எழுதியுள்ளார். அதேபோல் முசோலினியின் பாசிசத்தைப் பற்றிக் குறிப் பிடும்போது, பாசிசம் புதிதாகப் பிறந்த தத்துவமல்ல. புராதன . எதேச்சாதிகாரத்துடன், தற்போதைய மெஷின் யூகத்தின் அவசியத்துக் கேற்ப - மனிதச் சிந்தனையையும் சுதந்திரத்தையும் நசுக்குவதற்காக கட்டிக்கோக்கப்பட்ட கடு தாசிக் குப்பையே அது என்று எழுதி, இது நிரந்தர மான தத்துவமாக இருக்க முடியாது என்பதில் ஆச்சரியம் மில்லை”* என்றே முடிக்கிறார். பின் ஏன் அவர் இவர்களைப்பற்றி எழுதினார்? 1937ம் வருஷத்தில் மணிக்கொடிப் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் நவயுகப் பிரசுராலயம் என்ற புத்தக வெளியீட்டுப் பிரிழை வும் தொடங்கி, மளமளவென்று பல புத்தகங்களை வெளிக் கொணர்ந்தார்கள், புதுமைப்பித்தன் கதைகளும் அதன் வெளியீடாகவே வெளிவந்தது. அந்தப் புத்தக வெளியீட்டுப் பிரிவில் பலரது வாழ்க்கை வரலாறு நூல்களும், முக்கிய மாக' அரசியல் உலகில் பிரபலமானவர்களின் 'வரலாற்று நூல்களும் வெளிவந்தன. உதாரணமாக சமன் டிவேலரா, மைக்கேல்) காலின்ஸ், லெனின் முதலியோரின் வரலாறுகள் வெளிவந்தன. இந்த வரிசையில் பல எழுத்தாளர்களும் எழுதி னார்கள். இந்த வரிசையில்தான் புதுமைப்பித்தன் ஒரு நூலைத் தனியாகவும் இன்னொன்றை இவர் பாதியும் இன்னொருவர் பாதியுமாக எழுதி முடித்தனர். அவைதான் முசேரன் னியையும் ஹிட்லரையும் பற்றிய நூல்கள். இந்த இரு புத்தகங்களையும் , அசுரவேகத்தில் எழுதி முடித்து விரைவில் கோண்டுவர வேண்டும் என்ற அவசரமே, இந்தப் புத்தகக் களை எழுதி முடிக்கும் பொறுப்பை இவரிடம் தள்ளி பிடச் செய்திருக்கும் என்றே நினைக்கிறேன். வேறு விசேடக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.