பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23) -- புதுமைப்பித்தன் இந்த ஐம்பத்தைப் பல விதத்திலும் வளர்த்துப் பயன்படுத்தி இருக்கிறேன் என்றும் நினைக்கிறேன்?, என்னைப் பின்பற்றி இந்த ரூபத்தைக் கையாண்டு சிலர் அடியொற்றி வருவதை யும், வர முயல்வதையும் பார்க்கிறேன். கேள்வி : புதுமைப்பித்தன் அதிக வெற்றியஐடந்த இலக்கியத் துறை எது? சிறு கதையா? குறு நாவலா? நாடகமா? கவிதையா? - பதில் : புதுமைப்பித்தன் சிறுகதை, குறுநாவல், நாடகம், கவிதை எல்லாம் எழுதியிருந்தாலும், அவர் பெரு வெற்றியடைந்த ஒரே துறை சிறுகதை மட்டும்தான். அதில் சந்தேகமில்லை, "அவர் எழுதியுள்ள “சிற்றன்னை' என்ற குறுநாவலும் அவரது மேதாவிலாசத்துக்கொத்த சிறந்த படைப்பு எனச் சொல்ல முடியாது. நாடகம், கவிதை முதலியவை யெல்லாம் அவரைப் பொறுத்தவரையில் சோதனை நிலை யோடு நின்றுவிட்டன என் லாம். சிறு கதையைத் தவிர, அவர் நாவல். துறையி ஆழம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. நாவல் எழுதுவதற் கான அனுபவம்,, திறமை, வாழ்க்கையைப் பரந்த வீச்சில் பார்க்கும் மார்வை,, பலவிதமான பாத்திரங்களையும் வடிக்கும் திற மை எல்லாம் அவருக்கு இருந்தன. ஆனால் நாவல் எழுதுவ தென்றல் இவற்றோடு கூட, அதில் முழுமூச்சாக ஈடுபட்டு, அதனை 'எழுதி முடிப்பதில் தொடர்ச்சிய *ன விடாமுயற்சியும், திட்டமிட்டுச் செயலாற்றுவதும் அவசியமாகும். ஆனால் புதுமைப்பித்தன் அப்படியெல்லாம் திட்டமிட்டு எதையும் செய்ததும் இல்லை; அவரது போக்குக்கும். அப்படி, யெல்லாம் திட்டமிடவும் முடியாது. எனவேதான். Forsyte Saga மாதிரி பல தலைமுறைக் காலத்தை உள்ளடக்கி அவர் எழுதத் திட்ட மிட்டிருந்த 'அன்னையிட்ட தீ!' என்ற நாவல் கூட, 'நாலாவது அத்தியாயத்தைத் தாண்டாமல் அரைகுறையாக தின்று விட்டது. அவருடைய சிறந்த சிறுகதைகள் என நீங்கள். எத மதிக் கி தீர்கள்? அதற்கு என்ன விளக்கம் தருவீர்கள்?