பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரபந்தம் சிறந்த சிறுகதைகள் எவை எனக் குறிப்பிடும் முன்னர் புதுமைப்பித்தனின் பொதுவான சிறப்புக்கள் என்ன என்பதை யும் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். . முதலாவதாக, வாழ்க்கையில் பிறர் எதிர்நின்று பார்ப்ப தற்கே கூசிய சமுதாயப் புன்மைகளைச் சாட்டையடி கொடுப்பது கோல் எதிர்த்துச் சாடியதில் புதுமைப்பித்தனே தமிழ்ச் சிறு கதை : உலகில் முதல் எதார்த்தவாதியாகவும் கலகக் கா ராகவும் விளங்கினார். அவரது கதைகள் பலவும் சமூதாயத்தை நோக்கி ஆணித்தரமான கேள்விகளை எழுப்பின. 'அழுகி நாற்றமெடுத்துப் போன 'சமுதாய நியதிகள், சம்பிரதாஜ் கள், "ஊழல்கள் முதலியவற்றைக் கீறிப்பிளந்து காட்டின. இந்த மாதிரியான விஷயங்களைச் சுட்டிக்காட்டி, 'அவந்ததும் காம்னும் கதையில் அவர் எழுதியுள்ளதைப் போல் **சம்மா 'நாசுக்காகக் கண்களை மூடிக்கொள்ளாதீர்கள் என்று இடித்துக் கூறி, இதற்கு நீங்களும்தான் பொறுப்பு என்று சொல்லாமற் கூறின. இந்த நோக்கிலே பார்த்தால் *கவர்' தனும் காமனும்', 'பொன்னகரம்', 'துன்பக்கேணி ! 'கல்யாணி', 'வழி' ‘மகாமசானம்', 'ஆண் சிங்கம் முதலிய கதைகள் சிறந்தவை என்று கூறலாம். .. இரண்டாவது, அவர் காலத்திய எழுத்தாளர்கள் பலரும் வேறுமனே காதல்-கத்திரிக்காய் என்று பொதுவாகக் கதை பண்ணிக்கொண்டும், கருத்தாழமற்ற சாதாரணக் குடும்பக் கதைகளை எழுதிக்கொண்டும் இருந்த சமயத்தில் அவர் ஒருவரி தான், சமுதாய அமைப்பின் பொருளாதார உறவுகள், முரண் பாடுகள், சுரண்டல் முதலியவற்றினால் வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதைகள் எழுதினார்:

  • 'வறுமை என்பது முதலாளித்துவத்தின் விலக்க முடியாத

நியதி. வியாதியும் கூட. மனித சமூகத்தின் அபார அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும், வளர்க்கவும். அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டு மானால் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீ கீ மனிதன் வசம்தான் உண்டு என்று தமிழ் இலக்கிய உலகில் முதல் குரல் xெnஒத் 4. பி-15)