பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 புதுமைப்பித்தன் தவர் அவர் தான், ஆனால் இந்த சஞ்சீவி எங்கே (யார் வசம் இருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டாவிட்டாலும், தொட்டுக்கூடக் காட்டாவிட்டாலும், இந்தக் 'குசேல வியாதி யின் ஆணி வேர் எங்கிருந்தது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். 'பட்டணத்திலே மாவிலைக்கும் கூட காசு கொடுத் துத்தான் வாங்க வேண்டும். மாவிலைக்குமா விலை என்று மலைத் துப் போகாதீர்கள். மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டு மானால், வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மரத்தில் ஏறிப் பறித்து வீடு கொண்டு வந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ் திரப்படி இந்த உழைப்பின் மதிப்பை. அந்த இலையின்மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும், அதுதான் விலை என்பது. பட்டணவாசிகள் மண்முதல் மாங்காய் வரை எல்லாப் பொருள் களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள், இதுதான் அழகு, நாகரிகம்! என்று விநாயகர் 'சதுர்த்தி ' என்ற கதையிலே அவர் எழுதினார். 'இரும்பு யுகம்” என்று அவர் குறிப் பிடும் இன்றைய சமுதாய அமைப்பில் எல்லாமே. - விலைக்கு வாங்கப்படுவதுதான் நாகரிகமாக் , 'இருக்கிறது என்பதை அவர் கண்டார். இந்த உணர்வின் பயனாகத்தான். அவரது கதைகள் பலவும். பொருளாதார உறவின் விளைவாக எழும் பிரச்சினைகளை அடி நாதமாகிக் கொண்டிருந்தன. இவ்வாறு பார்த்தால் 'மனித எந்திரம்", "ஒரு நாள் கழிந்தது', 'இது மெஷிரன் யுகம்', 'நியாயம்தான்'; 'செல்லம்மாள்', 'நாசகாரக் கும்பல் முதலியவை எல்லாம் சிறந்த கதைகளாக விளங்கு. கின்ற ன எனலாம். ... . . ... . .. மூன்றாவதாக காலஞ்சென்ற நண்பர் கு. அழகிரிசாமி புதுமைப்பித்தனைப் பற்றி எழுதும்போது, இருபதாம் நூற் றாண்டின் தமிழ்க்கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத் தவர் பாரதி. தமிழ் வசனத்துக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன் , ஆனால். பாரதிக்கு முன் தமிழில் மிகச்சிறந்த கவிச் செல்வங்கள் இருந்தன. புதுமைப் பித்தனுக்கு முன் மிகச் சிறந்த வசனச் செல்வங்கள் இருந்தன எனச் சொல்ல முடியாது , புதுமைப்பித்தனின் இலக்கியம் தமிழ் நாட்டு வசன இலக்கியத்தின் சொத்தும் அவர் வசன