பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 புதுமைப்பித்தன் லௌகிக தர்மம் எனப்படுவதற்கு இரையாக்கி விடுவதைப் " பார்க்கிறோம். இதைப் போலவே, " காலனும் கிழவியும்' என்ற அவரது , முற்காலக் கதையில், உன்னால் என் 'உ.சுரத் தானே எடுத்துக்கீட்டுப் போவமுடியும். யோசிச்சுப்பாரு த. ஒண்ணெ வேறையா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா? அதை உன்னைப் படைச்ச 'கடவுளாலேயே செய்ய முடியாதே! என்று - எமனிடமே எதிர்ச்சவால் விடுத்து, materialism பேசும் கிழவியைப் பார்க்கிறோம். ஆனால் புதுமைப்பித்தன் கடைசியாக எழுதிய கதை எனக் கருதத் தக்க 'கயிற்றிரவு' என்ற கதையிலோ, நான் ஓடினால் காலம் ஓடும். ' நான். அற்றால் காலம் . அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் அதுவும், நான் அற்றுப் போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு! என்று தன்னனவே உலகம் என்று தனிமனித வாதத்தின் உச்ச நிலையில் நின்று existentialism பேசும். புதுமைப்பித்தனைக் காண்கிறோம். இதிலும் - முன்னதில் இருந்த புரட்சித் தன்மை பின்னதில் குடியோடிப் போகிறது. அவரே குறிப்பிட்ட அவரது கதைகளின் நம்பிக்கை வறட்சி', அதன் தர்க்கரீதியான விளைவாக அவரை எப்படிப்பட்ட தனிமைவாதத்திற்கு கொண்டு போய் நிறுத்துகிறது என் பதையே இவை யாவும் புலப்படுத்துகின்றன. இது இன் றைய எழுத்தாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையும் பாடமும் ஆகும் என்றுதான் கருதுகிறேன், . . . - புதுமைப்பித்தன் எழுத்துக்களில் இன்னும், அச்சேறா தவை எவை? அவற்றை அச்சில் கொண்டுவர நீங்கள் ஏதேனும் முயற்சி எடுத்து வருகிறீர்களா? புதுமைப்பித்தன் எழுத்துக்களில் இன்னும் புத்தக வடி, வில் வெளிவராதவை அவர் எழுதிய புத்தக மதிப்புரைகள், மற்றும் ரச்மட்டம் என்ற புனைபெயரில் அவர் தினமணியில்