பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 238 இவ்வாறு இருவேறு திசையில் பிரிந்த நாங்கள் மீண்டும் சந் தித்துக் கொள்ளவில்லை. 1348 ஜன் மாதம் நான் திருநெல் வேலியில் இருந்த காலத்தில், புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் நண்பரான திருவனந்தபுரம் சிதம்பரத்தின் மூலம் புதுமைப் பித்தன் தம்மை வந்து பார்க்குமாறு தகவல் அனுப்பியிருந் தார், நான் ஒரு வாரத்தில் திருவனந்தபுரத்துக்கு வருவதாகச் சொல்லியனுப்பினேன். ஆனால் புறப்படுவதற்கு முன்னால் நண்பர் சிதம்பரத்திடமிருந்து ஒரு தந்தி வந்தது. 'புதுமைப் பித்தன் நேற்றிரவு காலமாகி விட்டார்' என்பது தான் செய்தி, அவரைக் கடைசி காலத்தில்கூடப் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற அங்கலாய்ப்பு தான் மிச்சமாயிற்று. - கேள்வி: * புதுமைப்பித்தனின் இலக்கியம் அவருக்குப் பின் வந்த இலக்கியத்தைப் பாதித்துள்ளதா? இனி வரும் நாட்களில், அவரது பாதிப்பு விரிவடையும் எனக் கருதுகிறீர்களா? அல்லது சுருங்கும் என மதிக்கிறீர்களா? ஏன்? . : பதில் : புதுமைப்பித்தன். தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சி யிலும் வரலாற்றிலும் ஒரு மைல்கல்; ஒரு திரும்பு முனை; ஒரு சகாப்தம். அதில் சந்தேகமில்லை, எவ்வாறு பாரதி தமிழ்க் கவிதை உலகில் .. நடை, வடிவம், உள்ளடக்கம் முதலிய வற்றில் புதியன புகுத்தி - இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்குத் தலைமகனாக விளங்கினாரோ, அதேபோல் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு சிறப்புமிக்க தலைமகனாக விளங்கிய வர். புதுமைப்பித்தன். அடிமைத்தனத்தின்மீது வெறுப்பு, வாழ்க்கைப் புதரின் முட்களில் விழுந்து தவிக்கும் மக்களின் மீது பரிவு, சமுதாயத் தில் நிலவும் செல்லாகிப்போன சம்பிரதாயங்கள், சடங்குகள், சட்டங்கள் ஆகியவற்றின்மீது ஆத்திரம். முதலியவை புதுமைப் பித்தனின் எழுத்துக்களிலும் குடிகொண்டிருந்தன. இலக்கிய உலகில் அவர் ஒரு கலகக்காரராகவும், அதே சமயம் தாம் கண்ணால் கண்ட வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டுவதில் அவர் ஓர் எதார்த்தவாதியாகவும் விளங்கினார். .