பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் புதுமைப்பித்தனும் ஒரு வழிக்கும் கட்டுப்பட்டு வராத தைக் கண்டு, அவரது சித்தி அவரை மறைமுகமாகவும் நேர்முகமாகவும் கடிய ஆரம்பித்தாள். "புது மனைவியின் சாக்ஸம்', 'தலையணை மந்திரம்', 'பெண்டாட்டியாத்தா பெரியாத்தா' முதலிய வார்த்தைகள் அவளது சகஸ்ர நாமார்ச்சனையாகி விட்டன. தந்தையும் சும்மா இருக்க வில்லை, உருப்படாத பயல், தறுதலை, சோம்பேறி, தண்டச் சோற்றுக்காரன், பொறுப்பற்ற ஜென்மம்- இத்தியாதி ரகத்தில் நாமாவளி தொடங்கி விட்டார், புதுமைப்பித்தனோ சுதந்திர உள்ளம் படைத்தவர். எனவே, தகப்பனாருடைய மிரட்டலுக்கும் வசவுகளுக்கும் தலை குனி23ரது தம் போக்கில் போக எண்ணினார். அவரது ஆசை யெல்லாம் - எங்கேயாவது சென்று பத்திரிகைத் தொழிலில் ஈடுபடவேண்டும் என்பதே. அதையே எண்ணி, அதற்காகவே அலைந்து திரிந்தார்; கதை கள் .. எழுதினார்; கடிதங்கள் எழுதினார். எப்போது பார்த்தாலும் படிப்பு; எழுத்து; அலைச்சல், எவ்விதச் சம்பாத்தியமுமின்றி இந்த மாதிரிக் காரியங்களில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட சித்திக் கும் தந்தைக்கும், இவரது போக்கு பைத்தியம் போலவே பட்டது. சொ. விருத்தாசலம் 'புதுமைப்பித்தன்? - ஆவ தற்கு முன்னால் அவரது வீட்டார்தான் அவரைப் பித்தன்' எனக் கருதினார்கள். புதுமைப்பித்தனுக்கு வரவர் பிறந்த வீடு சுடு காடாக மாறி வருவதாகத் தோன்றியது. சித்தியின் கொடுமை, தந்தையின் கோபம், இவற்றால் ஏற்பட்ட இனக்காரத்தால் வீட்டிலுள்ள மற்றவர்களும் புதுமைப் பித்தளை மதியாது சொன்ன சுடு சொற்கள்- எல்லாம் புதுமைப்பித்தனைச் சுட்டன. அவருக்கு அமைதியில்லை; மனம் கொதித்தது: உலையிலே கொதிக்கும் தண்ணீர் சூடேறிச் சூடேறி, கடைசியில் பொங்கிக் கொதிக்கிறது. ஆனால் , அது எந்த நிமிஷம் கொதிக்கும்? புதுமைப்பித்தனின் நிலை அப்படித்தான் இருந்தது. நாளுக்கு நாள் கொதிப்பேறி அந்த புதுமைப்பித்தனின் உள்ளம், எந்தக் கணத்தில்