பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புதுமைப்பித்தன் என்று புதுமைப்பித்தன் பாடியிருக்கிறாரே! அந்த 'இருட் டில்' தான் அவர் நின்றார். ஒன்றும் தோன்றாமல், ஒன்றும் பேசாமல் மனைவியின் கையைப் பிடித்தவாறு அந்த அர்த்தசாம வேளையில் வண்ணார்பேட்டை சாலைத்தெரு வைக் கடந்து நடந்தார் புதுமைப்பித்தன். எங்கு செல் வது? முதலில் இரவு தங்குவதற்கு இடம் வேண்டுமே! எந்தவித யோசனையும் இன்றி முருகன்குறிச்சியை நோக்கிச் செல்லும் சாலையில் நடந்தார். கடைசியாக, வண்ணார்பேட்டையிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பாளையங்கோட்டையில் குடிவாழும் தம் சித்தப்பா சுப்பி; மணிய பிள்ளையின் வீட்டில் போய் நின்றார். அன்றிரவும் அதற்கு பின் சில நாட்களும் அங்கேயே தங்கியிருந்தார் புதுமைப்பித்தன். சொக்கலிங்கம் பிள்ளைக்கு, தம் பிள்ளை தம் தம்பி வீட்டில் நிழல் தேடியிருக்கும் விஷயம் மறு நாளே ' எட்டி விட்டது.. சுப்பிரமணிய பிள்ளையோடு சண்டை போட்டு, புதுமைப்பித்தனை அங்கிருந்தும் விரட்டும்படி ஏவினர். புதுமைப்பித்தனின் சித்தப்பா அதற்கு இணங்கவில்லை. எனினும் அவர்தான் புதுமைப்பித்தனையும் கமலாம்பாளை யும் எத்தனை நாளைக்கு உடன் வைத்திருக்க முடியும்? புதுமைப்பித்தனும் அங்கு தாற்காலிகமாகத்தான் 'தங்கி அர். ஆனால் தாற்காலிகத்துக்கும் ஒரு முடிவு வேண்டுமே! எனவே புதுமைப்பித்தன் திருநெல்வேலிச் சீமையை விட்டுத் திருவனந்தபுரத்துக்குப் 1.: யணமானார். கசப்பு திறைந்த மனத்தோடு . சென்ற புதுமைப்பித்தனுக்குத் தன்னை அவமதித்து நடத்திய தம் குடும்பத்தாரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சியே மிஞ்சி நின்றது,' , திருவனந்தபுரத்திலும் புதுமைப்பித்தனால் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. சம்பாத்தியமில் லாத மருமகனை வைத்துச் சாப்பாடு போடவா பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள்? எனவே அவர், அங்கிருந்தும் மனைவியுடன் வெளியேறினார், வெளியேறும்போது எங்கு செல்லப் போகிறோம் என்பது அவருக்கும் தெரியாது; அவரது மனைவிக்கும் தெரியாது. இருவரும் - ரயில் ஏறி