பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதுமைப்பித்தன் அம் சங்கப் பலகையோடு சம்பந்தப்படாத தனி ஆஸ்தான நபர்கராகப் போய் விட்டார்கள். அந்தக் காலத்துப் பத்திரிகைகளின் நிலைமை இன் றைய நிலைமையைவிட மோசம். குறைந்த முதலீடு; நிறைந்த ஆர்வம், ஆர்வத்துக்கு என்றைக்குத்தான் தமக்குப் பஞ்சம்? அச்சடித்த பத்திரிகைகள் அனைத்தும் விற்றலே பெரிய வெற்றி. அப்படியே விற்றுப் போனா லும், அதில் செட்டிப் பிள்ளையைப்போல் வட்டிக்கணக் குப் பார்த்தாலும் லாபக் கலம் பூஜ்யம், இந்த மாதிரி நிலை மையில் தான் புதுமைப்பித்தன் பத்திரிகைத் தொழிலைத் தம் ஜீவனோபாயமாகக் கொள்ள" . நினைத்தார்.. மணிக் கோடி, காந்தி - இரு பத்திரிகைகளுக்கும் தமது சிருஷ்டி களை அனுப்ப முனைந்தார். விஷயதானம் செய்தார். தானம்தான்! ஆரம்ப எழுத்தாளன் தன் சிருஷ்டி வெளி வந்தால் போதும் என்று கருதுகிறவன், சன்மானத்தை அநேகமாக எதிர்பார்ப்பவன் அல்ல. புதுமைப்பித்தன் அந்தச் சமயத்தில் இலக்கிய உலகத்தில் புது நபர்; 'ஆம்ப எழுத்தாளர். ஆரம்பம்தான். என்றாலும், . 'பிறந்தவுட னேயே நஞ்சுக் கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு தெருவழியாகக் கோஷமிட்டுக் கொண்டு வரும், குழந்தையின் அசாதாரணத் தன்மை பெற்றிருந்ததாக, தமது 'அவதாரம்' என்ற கதையில் இசக்கி முத்துவை வருணிக்கிறாரே, அதுபோலத்தான் புதுமைப்பித்தனும் அந்த ' மாதிரியான் அசாதாரணப் பிறவியாகவே இலக்கியம் உலகில் புகுந்தான். என்றாலும் புதுமைப்பித்தனுக்குப் பணத் தேவை இருந்தது; அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் பத்திரிகைகள் இல்லை. அப்போது “காந்தி'ப் பத்திரிகையில் “கண்டதும் காதல் --பொய்யா? மெய்யா?' என்ற, 'அந்தக் காலத்துப் புதிய விழிப்பைப் பற்றி , ருசிகரமான 'விவாதம் ஒன்று ஆரம்ப மாயிற்று. புதுமைப்பித்தன் இந்த விவாதத்தின் மூலமாக இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தார். 'குலோப் ஜான் காதல்' என்ற தலைப்பில் ‘கண்டதும் காதல்' விவகா ஏத்தைக் கிண்டல் செய்து அருமையாக எழுதி அனுப்பினார்.