பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் இப்படி அருமையான இலக்கி 2)த்தை, தாம் வீட்டைவிட்டு வெளியேறி, வேகும் நெருப் பில் வாழ்வதுபோல் இருந்து வந்த காலத்தில்தான் சிருஷ் டித்தார். நித்த நித்தம் நித்ய தேவைப் பிரச்னை. மணிக் கொடியும் காந்தியும் புதுமைப்பித்தனின் விஷயதானத்தை ஏற்க முடிந்ததே யொழிய, அவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளச் சக்தியற்றிருந்தன. ஆனால், புதுமைப் பித்த னுக்கோ' சென்னைக்கு வந்துதான் தீரவேண்டும் என்றி ருந்தது. வ. ரா. வுக்கு ' மாறி மாறிக் கடிதங்கள் எழுதி - ச், 63. ரா.வோ வர வேண்டாம் என்பதற்கான நிலை ஆமையை எடுத்துக் கூறி வற்புறுத்தினார். ஆனால் தில்லை நோக்கிய நந்தனைப்போல் தவித்த புதுமைப்பித்தனை, எத்தச் சக்தியும் தடுத்து நிறுத்தவில்லை, புதுமைப்பித்தன் சென்னைக்கு வருவதால்) வ. ரா. வுக் கும், சொக்கலிங்கத்துக்கும் எந்தவித நஷ்டமும் கிடையாது, வந்து என்ன செய்வது என்பதுதான் பிரச்னை. சென்னை வின் 'மணிக்கொடி' பட்டொளி வீசிப் பறந்தாலும், அதன் ஓம் நsrர்ந்த கப்பம் எப்போதும் . . 'ஆட்டம் கண்டு கொண்டே யிருந்தது. , மூலதனப் பலமில்லை, எனவே மணிக்கொடிப் பத்திரிகை உயிர் வாழும் போராட்டத்தில் தான் ஈடுபட்டிருந்தது. மத்திரிகை மட்டுமல்ல, பத்திரிகை யோடு சம்பந்தப்பட்டவர்களும் அப்படித்தான். எனவே 'சென்னைக்கு வந்து சிவமாகி' நிற்கும் இலக்கிய சேவகர் கள் தமது தொண்டர் படையில் புதுமைப்பித்தனையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளத் துணியவில்லை. இந்த மாதிரி நிலைமையில்தான், ஒருநாள் புதுமைப் பித்தன் திடுதிப்பென்று தெய்வப் பிரசன்னம் மாதிரி?' சென்னையில் வந்து நின்றுவிட்டார். வந்தவுடன் "வ. ரா, வையும் சொக்கலிங்கத்தையும் சந்தித்தார். அன்று முதல் புதுமைப்பித்தனும் அந்த இலக்கியத் தொண்டர் படை யோடு ஐக்கியமாகி விட்டார். ஊர் தேடிவந்த புதுமைப் பித்தளை உதறித் தள்ளவும் முடியாது: உதவி செய்யவும் இயலாது; இது. மணிக்கொடி. சம்பந்தப் பட்டவர்களின், தர்ம சங்கடமான நிலைமை. என்றாலும் லட்சிய வேட்கை