பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஊழியனில் ஊழியம் 37 சுதந்திரமான போக்குத்தான். ' ஊழியனில் அப்போது இ. சிவம் (இசக்கிமுத்து சிலம்) என்ற ' ' நாகர்கோயில் ஆசாமி ஒருவரும் வேலை பார்த்து வந்தார். புதுமைப் பித்தனுக்கு அவர் சீனியர். மேலும் அவரும் கதைப் பகுதியில்தான் கவனம் செலுத்தி வந்தார். எனவே தம்மைவிட நன்றாகக் கதைகள் எழுதும் ஒரு வர் தம்முடன் ஒரே ஸ்தாபனத்தில் வேலை பார்ப்பது அவருக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. இந்தச் சங்கடத்தின் காரண மாக, புதுமைப்பித்தனுக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு கர கரத்தது. புதுமைப்பித்தனை அவர் அடக்கியாள எண்ணி னார், புதுமைப்பித்ததே அந்த இடத்தை விட்டே வெளி யேற எண்ணினார். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கி யிருந்தார். மேலும், முதன்முதல் கிடைத்த 'பிருஹஸ்பதி' பதவியை உதறித் தள்ளிவிட்டுத் தெருவில் இறங்கி நிற்பதா என்று அவருக்கு யோசனை , என்றாலும், முன்னும் பின்னும் வரப்போவதைக் கவனித்துப் பார்க் காத அவரது பிறவிக் குணம், புதுமைப்பித்தனுக்கும் ஊழியனுக்கும். இருந்த தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது, வெளியேறிவிட்டார். தாம் வெளியேறியதற்குரிய இந்தக் காரணத்தை , புதுமைப்பித்தன் பொதுவாகத் தம் நண்பர்களிடம் கூறுவர் தில்லை; வெளியேறிய சந்தர்ப்பத்தைத்தான் குறிப்பிடு வார். ஒரு நாள் - ஏதோ மொழிபெயர்ப்பு வேலைக்காக டிக்ஷனரி (அகராதி) கேட்டேன். ஆபீசுக்கும் ஒரு அத ராதி, இருந்தால் நல்லது என்றேன்' , ' நீர்தான் பி. ஏ. படிச்சவராச்சே, , உமக்கு எதுக்கு டிக்ஷனரி? என்று கேட்டார்கள். 'ஏதேது, இது ரொம்ப மோசமான இடம் போலிருக்கு, சேச்சே! இது ' ஆபத்து! என்று, நினைத் தேன்; வெளியேறிவிட்டேன் என்று தமக்கே உரிய ஹாஸ்ய ரசத்துடனும், தூக்கியெறிந்து பேசும் வாய் வீச்சுடனும் பேசுவார். புதுமைப்பித்தன். ஊழியனை விட்டு வெளியேறிய புதுமைப்பித்த னுக்கோர் மீண்டும் எங்காவது நிழல் தேட வேண்டிம்!