பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்கொடியின் காலட்சேபம் யில்லை. சிலேஷ்ம நாடிதான் உயர்ந்து துடித்து, அந்திம தசையின் கரகரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. எனவே பணிக்கொடியைத் தொடங்கி நடத்தியது. அதன் ஆசிரியரும் நிர்வாகஸ்தருமான கே. சீனிவாசன் 'பாம்பே ஸ்டாண்டர்டு' பத்திரிகைக்கு ஆசிரியராகப் புறப்பட்டுப் போனார்; டி. எஸ்டி சொக்கலிங்கம் 'தினமணி'க்கு ஆசிரியரானார்; அந்தத் தத்தாத் ரேயரில் ஒருவரான வ. ரா. சிறிது காலம் 'சுதந்திரச் சங்கோடு தொடர்பு கொண்டிருந்து விட்டு, பின்னால் கொழும்பு * வீரகேசரி' பத்திரிகைக்கு உதவியாசிரியராகச் சென்றார். மணிக்கொடியுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இப்படித் திசை காவலர்களைப் போலப் பிரிந்து சென்றாலும், மணிக்கொடி பத்திரிகை மட்டும் நிற்கவில்லை; புதுமைப்பித்தன், . பி. எஸ். ராமையா முதலியோருக்கு மணிக்கொடி நின்றுவிட்டால் அடுத்தபடி, என்ன செய்வது என்பது லகுவில் விடை காண முடியாத மாபெரும் கேள்விக் குறியாகத் தோன்றியது. எனவே அவர்களுக்கு ஆதார்" பகுதியாக மணிக்கொடியும், மணிக்கொடிக்கு ஆதார ஸ்ருதி யாக அவர்களும் இருக்க நேர்ந்தது. பி. எஸ். ராமையா, புதுமைப்பித்தன் முதலானோர் பத்திரிகை நிறுத்தப்படுவதை விரும்பவில்லை. ' தாங் கள் முழுமூச்சுடன் செய்துவரும் இலக்கியப் பணி தடைப்பட்டுப் போய் விடுமே என்ற கரிசனை? மட்டுமல்ல; அவர்களுக்கும் ஜீவனோபாயத்துக்கு ஒரு சாதனம் தேவையா இருந்தது. மணிக்கொடிப் பத்திரிகை தங்களுக்கு ஒரு அமுதசுரபியாக உதவும் என்று நம்பாத அளவுக்கு அவர்கள் புத்திசாலிகளா யிருந்தாலும் மனசுக்குப் பிடித்த ஒரு சேவையைச் செய்வதன் மூலம் - திருப்தியோடாவது. இருக்கலாமே என்பதுதான் அவர்களது ஆத்ம சமாதானம். 1. எனலே சீனிவாசன் பிரிந்து சென்ற பிறகும், மணிக் கொடிப் பத்திரிகையை' அவரது பெயராலேயே மணிக் கொடிப் பரம்பரை எழுத்தாளர்கள் நடத்தத் துணிந்தான் அள். அவர்கள் பத்திரிகையை எப்படி நடத்தினார்கள் என்ற விஷயத்தை, புதுமைப்பித்தன் என்னிடம் ஒரு நான் நிசப்ாேகச் சொன்னார்: