பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் “'மணிக்கொடிப் பத்திரிகை எங்கள் ராச்சியத்துக்கு வந்தது. வரும்போது அச்சடிக்கிறவனுக்குக் கொடுபட வேண்டிய பாக்கி பதினெட்டே முக்கால் ரூபாய். வர வேண் டிய பணமும் அதிகம் ஒன்றுமில்லை. ஒழுங்காக வருவது. இல்லை. பசி, பட்டினி 'என்பவை பிரச்னைகள் அல்ல; பழகிப் போன விவகாரம். இந்தச் சமயத்தில் கி. ரா. சவும் எங்களோடு வந்து சேர்ந்து இலக்கிய' சேவைக்குத் ': துணிந்து விட்டார். பிரஸ்காரனோ பணத்துக்கு நெருக்குவான். ஆபீஸ்' நாற்காலி, மேசை அத்தனையும் வாடகைச் சரக்கு;. வாடகை என்பது பெயரளவில்; நடைமுறையில் அனுபோக. பாத்தியதை கொண்டாடுவதுதான் எங்களால் முடிந்த காரியம். நாங்களோ 'பத்திரிகை அச்சாகிப் போனால்தான் பணம் புரளும்' என்று பிரஸ்காரனை. . . மிரட்டுவோம். அச் துடித்துக் கொடுப்பான். என்றைக்காவது எங்கிருந்தாவ ஒரு நாணயஸ்தனான 'ஏஜண்டோ அல்லது , அப்பாவிச் சந்தாதாரோ . மூன்று அல்லது நாலு : ரூபாய் மணியார்டர் அனுப்பி விடுவான். மணியார்டர் வந்துவிட்டால், உடனே" நாங்கள் எல்லாம் குபேரப் பிரபுக்கள் தான். நேரே ராம கிருஷ்ண லஞ்ச் ஹோமுக்குப் போவோம்; திரும்பிவந்து இலக்கிய சேவையில் ஈடுபடுவோம். மணியார்டர் பியூன் வராத நாட்களில் இன்னொரு நண்பரை எதிர்பார்ப்போம். மணிக்கொடியில் எழுதி வந்தவர்களில் சிதம்பர சுப்பி மணியன் வேறு இடத்தில் வேலை பார்த்து . மாதா மாதம் சம்பளம் வாங்கும் ஆசாமி. அவர் வந்தால் ஏதாவது காசு புரளும்; 'காப்பி டண்டு; சாப்பாடு 2...ண்டு, ஒரு சமயத் நானும் ராமையாவும் இந்தத் தொழிலை விட்டுவிட்டு பெப்பர்மிண்ட் விற்கலாமா, பீடி விற்கலாமா என்றுகூட யோசித்ததுண்டு... மணிக்கொடிப் பத்திரிகை புதுமைப்பித்தன், பி. எஸ். ஓாமையா முதலியோரின் ஆளுகைக்கு வந்த பின்னர் அதன் பழைய விஸ்வரூபம் குறுகி, 'கைக்கு வசதியான வாமன் ரூபம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் அரசியல் விஷயங் கள், பொருளாதாரக் கட்டுரைகள் மற்றும் பலவித விஷயங்