பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்கொடியின் காலட்சேபம் 43 களைச் சுமந்துவந்த மணிக்கொடி முழுக்க முழுக்க ' சிறு அதைப் பத்திரிகையாகவே மாறி விட்டது. மணிக்கொடி அரசியல் - இலக்கியப் பத்திரிகையாக இருந்த காலத்திலேயே பிச்சமூர்த்தி , கு. ப. ரா., சிட்டி, சி, சு. செல்லப்பா , இளங் கோவன் முதலிய எழுத்தாளர்கள் அதில் எழுத ஆரம்பித்தார் கன். பின்னர் கதைப் பத்திரிகையாக மாறி மாதமிருமுறை வெளி வந்த காலத்தில் சிதம்பர சுப்பிரமணியன், க. நா. சுப்பிரமணியன், பி. எம். கண்ண ன், 'மௌனி' முதலிய எழுத் தாளர்களும் மணிக்கொடியின் குடும்பத்தார் ஆனார்கள். ஊக்கமும் உற்சாகமும் உயிர்வாழும் போராட்டமும் தான் மணிக்கொடிப் பத்திரிகை நடப்பதற்கு ஏதுவாயிருந்தன, ஆனால் வெறுங்கை முழம் போடுமா? எனவே கே. சீனிவாசன் பிரிந்து போன காலத்திலேயே நின்று போகவிருந்த மணிக் கொடி அந்தக் கண்டத்தைத் தப்பிப் பிழைத்தாலும், 1936-ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் திடீரென்று நின்று போய்விட்டது. பணிக்கொடிப் பத்திரிகை நின்றுபோனவுடன் அதனூேடு சம்பந் திப்பட்டவர்களுக்கு ஜீவனோபாய மார்க்கத்தைப் பற்றியதர்ம விசார நிர்ப்ாந்தம்ற்ப ட்டது. அந்தச் சமயத்தில் கொழும்பு

  • வீரகேசரி' என்னும் தினசரிப் பத்திரிகை அதிபரான செட்டி

யார் ஒருவர் சென்னைக்கு வந்தார். வீரகேசரியில் ஏற்கெனவே வ. ரா. வேலை பார்த்து வந்தார். சென்னைக்கு வந்த செட் டியார் வ. ரா. வோடு சம்பந்தப்பட்டிருந்த எழுத்தாளர்கள் சிலரைத் தமது - பத்திரிகைக்கு உதவியாசிரியர்களாகச் சேர்த்துக் கூட்டிப்போக எண்ணினார். இப்படி கொழும்பி ' லிருந்து செட்டியார் ஆசிரியர்களைச் சேர்க்க வரும். வைபவத் தைப் பற்றிப் புதுமைப்பித்தன் ஒரு தடவை . என்னிடம் கூறினார்: செட்டியார் ஆசிரியர்களைச் சேர்ப்பதில்லை. ஆள் பிடிக்கத்தான் வந்திருந்தார், தேயிலைத் தோட்டத்துக்குக் கூலியாட்களைச் சேர்க்க, கங்காணி வந்து ஆள் பிடித்துக் கொண்டுபோகிறனே, அந்த மாதிரிதான்! எனவே புதுமைப்பித்தன் வீரகேசரிக்குப் போக விரும்ப வில்லை. இருந்தாலும் பிழைப்புக்கு என்ன வழி என்று தெரியா