பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புதுமைப்பித்தன் நவயுகப் பிரசுராலயத்தின் நிர்வாகஸ்தர்கள் பத்திரிகைத் தொழிலில் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பாம்பே ஸ்டாண் டர்டில் இருந்த 12ணிக்கொடி. சீனிவாசன், அன்று 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை ஆசிரியராக இருந்த கே. சந்தானம், இண்டியன் எக்ஸ்பிரஸ்ன்ே அந்தக்கால் மானேஜரான எஸ், தி, சாமி, அன்றைய தினமணியின் .., உதவியாசிரியராக மிகுந்த இன்றைய தினமணி ஆசிரியர் ஆ. நா. சிவராமன் வத்தலகுண்டு பி. எஸ். சங்கரன், பி, எஸ். ராமையா ஆகியோர் கஸ்தாபனத்தின் ஆரம்பகால டைரக்டர்கள், தினமணி ஆசிரியராக இருந்த டி, எஸ் சொக்கலிங்கம். அதன் மானேஜிங் டைரக்டர் ; பி. எஸ். ராமையா பிரசுராலயத்தின் நிர்வாக ஆசிரியர், இந்தப் புதிய அமைப்பின்கீழ் 'மணிக்கொடி மீண்டும் வெளிவர ஆரம்பித்தது. மணிக்கொடியில் எழுதி வந்த எழுத்தாளர்களே மீண்டும் எழுதினார்கள்; - புதுமைப்பித் தனும் எழுதினார். "பக்த குசேலா," 'நாசகாரக் கும்பல்' முதலிய அருமையான நாடகம், . கதையெல்லாம் அந்தச் சமயத்தில் எழுதியவைதாம்.. நவயுகப் பிரசுராலயம் மணிக் கொடி.யை வெளியிட்டதோடு, புத்தக : வெளியீட்டையும் தொடங்கி வைத்தது. எட்டணா விலையில் மலிவுப் பிரசுரங்களை வெளியிடத் தொடங்கியது. நவயுகப் பிரசுராலயத்தின் முதல் வெளியீடாக 'ஆ,. நா. சிவராமனின் * மாகாண - சுயாட்சி" வெளிவந்தது. அதன்பின் பல புத்தகங்கள் வெளிவந்தன; கிராக்கியையும் சம்பாதித்தன. நவயுகப் பிரசுராலயம் வேலை தொடங்கி நன்கு நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது, இன்று திருநெல்வேலி இல் முனிசிபல் சேர்மனாக இருக்கும். எழுத்தாளர்: ப. ராம ஸ்வாகி {ப, ரா.) சென்னை வந்து சேர்ந்தார். 2. ராமஸ் வாமி சென்னைக்கு வந்தபின், கம்பெனியின் நிர்வாக டைரக்டர் சொக்கலிங்கம் 'டம், ரா. வை நவயுகப் பிரசுராலயத்தில் பதிப்பாசிரியராக நியமனம் செய்தார், மணிக்கொடியின் ஆசிரியராக இருந்த பி. எஸ். ராமையாவுக்கும், ப. ரா. வுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக ... ரா. சொக்கலிங்கம். இருவர்மீதும் ராமையாவுக்குக் கசப்பு