பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AR திரை தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் மிகவும் குறைவு. வந்துள்ளவற்றிலும் நினைவில் நிற்கக் கூடிய வையாகவும், எழுத்தாளர்களைச் சரியான முறையில் இனம் காட்டக் கூடியவையாகவும் உள்ளவை அதிலும் குறைவு, தமிழ்ச் சிறுகதை உலகில் அழியாத புகழையும் ஸ்தானத்தை கயும் பெற்றுள்ள அமரர் புதுமைப்பித்தனைப் பற்றி ஆசிரியரி ரகுநாதன் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களில் தனிச் சிறப்பு மிக்க படைப்பாகும். ஆசிரியர் ரகுநாதன் புதுமைப்பித்தனோடு நெருங்கிப் பழகியவர்; அவரது இதயத்தையும் இலக்கியத்தையும் நன் கறிந்தவர்; ஆழமாகக் கற்றவர். மேலும் புதுமைப்பித்தன் காலமான பின்னர் அவரது புகழைப் பரப்புவதிலும், அவரது நூல்களைத் தொகுத்து அவற்றை வெளிக் கொணரச் செய்வதி லும் அரும்பணி ஆற்றியவர், இந்தத் தகுதிகளும் புதுமைப் பித்தனிடம் அவர் கொண்டுள்ள ஈடுபாடும்தான் இந்த, 'வர லாற்று நூலைச் 'சிறப்புடையதாக்க அவருக்கு உதவியுள்ளன. புதுமைப்பித்தன் நூல்கள் அனைத்தையும் முறையாக வெளியிட்டு வரும் பணியை நிறைவேற்றி வரும் நாங்கள், புதுமைப்பித்தனைப் பற்றி ரகுநாதன் எழுதியுள்ள வரலாற்று நூலின் இந்தப் பதிப்பையும் எங்கள் வெளியீடாக வெளியிடு வதில் மகிழ்ச்சியடைகிறோம், செ. செல்லப்பன் மிதுரை 28-11-80