பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனர் ஜென்மமும், புனர் மரணமும் 47 ஏற்பட்டது. அதன் விளைவாக சொக்கலிங்கம் தாம் கம் பெனியின் நிர்வாக டைரக்டர் என்ற ஹோதாவில் ராமை யாவை ஆசிரியர் பதவியை விட்டு நீக்கி விட்டார், மணிக்கொடிப் பத்திரிகை மணிக்கொடி பரம்பரை" எழுதி தாளர்களின் ஆதிக்கத்திலிருந்து, 4. ரா. வின் ஆட்சிக்குக் கை மாறியது; 4. ரா. வின் ஆதிக்கத்தில் மணிக்கொடி சில வருஷ காலம் நடந்தது; பிறகு நிரந்தரமாக நின்று போய் விட்டது. இப்படி நின்று போன மணிக்கொடியை சமீபத்தில் பி. எஸ் ராமையா குழிப்பிள்ளையாகத் தோண்டி எடுத்துப் பார்த்துவிட்டு சில மாத காலத்தில் பழையபடியும் புதைத்து மூடிவிட்டார், மணிக்கொடியைப் பற்றிப் புதுமைப்பித்தன் தமது 'ஆண்மை ' என்ற கதைத் தொகுதியின் முன்னுரையில் பின் வருமாறு ரகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்:

  • மரிக்கொடிப் பத்திரிகையானது வெளிவரும் முன்பு

எத்தனையோ பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் புதிய பரிசீலனைகளுக்கு இடங்கொடுக்கும், உத்சாக மூட்டும், வரவேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடை யாது . அந்தப் பத்திரிகையை ஆரம்பித்த லட்சியவாதியான் கே . ஸ்ரீனிவாசன் அவருடைய அந்தக் குற்றத்திற்காக்' (?) பாஷைப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் போல், வேற்று மாகா ணத்திலே, வேற்று பாஷையிலே பத்திரிகைத் தொழில் நடத் தும் பாக்கியம் கிடைக்கப் பெற்று வாழ்ந்து வருகிறார், காலத் துக்கேற்றபடி உடுக்கடிக்கும் கோட்டான்களும், ஆவேசத் தோடு சீறுவதுபோல் 'பம்மாத்து' செய்து கொண்டு இருக் கும் கிழட்டுப் புலிகளும், 'பாஷையையும் பாஷையின் வளர்ச்சி யையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கும்படி அனுமதித்து வரும் தமிழரின் பாஷாபிமானத்தைக் கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும். அன்று மறுமலர்ச்சி என்ற ஒரு வார்த்தை புதிய வேகமும் பொருளும் கொண்டது. அதைச் சிலர் வரவேற்றார் கள்; பலர் கேலி செய்தார்கள், பெரும்பான்மையோர் அதைப் பற்றி. அறியாதிருந்தார்கள். மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை