பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனர் ஜென்மமும், பூனர் மரணமும், என்ற முனிசிபல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை எடுத்து வந்து, ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக நானும் பி. எஸ். ராமையா என்ற நண்பரும், எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம். அது இரண்டு மூன்று வருஷங்களில் கன்னிப் பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் நண்பரைப் பெற்றோம். அவர் அவளை ஒருவருக்கு விற்றார், விற்றவுடனே அவளுக்கு ஜீவன்முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை. இதுதான் தமிழில் புதிய பரிசீலனை கள் செய்யவேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசிையின் கதை." (1947) மணிக்கொடி. RS 44" விலைக்கு வாங்கிய நவயுகப் பிரசுரா -லயம் தன் பெயருக்கொப்ப, புதுமுறை இலக்கிய முயற்சி களைப் புத்தக உருவில் வெளியிட்டு வந்தது. அப்படி வெளி யிட்ட புத்தகங்களில் இன்றைய தலைமுறையின் சிறந்த சிறு கதை இலக்கியமாகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சியிலேயே ஒரு அசுர சாதனையாகவும் விளங்கும் புதுமைப்பித்தன் கதைகள்' என்ற நூலும் ஒன்று, புதுமைப்பித்தனின் சிருஷ்டிகள் முதன் முதலில் புத்தக உருவம் பெற்றது இந்தத் தொகுதியில்தான்; அது மட்டுமல்ல. தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயே ஆசிரியர் பெயரையே நூலின் தலைப்பாகக் கொண்டு வெளியிடும் பாக்கி யத்தையும் துணிவையும் பெற்ற முதல் கதாசிரியரும் புதுமைப் பித்தன்தான். இந்தத் தொகுதியைத் தொடர்ந்து புதுமைப் பித்தனின் 'உலகத்துச் சிறுகதைகள்,' ' நாசகாரக் கும்பல் 'பக்த குசேலா,' 'ஆறு கதைகள்,' 'பேஸிஸ்ட் ஜடாமுனி', 'கப்சிப் தர்பார்' முதலிய நூல்களை யெல்லாம் நல! யுகப்பிரசுரா லயம் வெளியிட்டது. இதனால் புதுமைப்பித்தனுக்கும் நவயுகப் பிரசுராலயத்துக்கும் தமிழ் வாசகரிடையே பிரபலமும் பேரும் கிட்டி, வந்தன.