பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினமணியும், தினசரியும் சரித்திரக் கதைகளை எழுதும் ஒரு கதாசிரியர்தான் அந்த நான்காவது நபர். சிலர் ஏதாவது பிரதிபலனை உத்தேசித்துத் தான் இரு. நபர்களுக்குக்கு இடையிலுள்ள் தொடர்பை முறிக்க. வினை செய்வார்கள்; சிலர் எந்த விதப் பிரதிபலனையும் எதிர் பாராமல், இயாகோவைப்போல் அந்த முறி ஷில் ஆனந்தம் காணும் ' குணவிகாரப் பிறவிகளாகவும் இருக்கக் கூடும். சம்பந்தப்பட்ட கதாசிரியர் எந்த ரகப்பிறவி யென்பதை ஆராயத் தேவையில்லை. இந்த நான்காவது நபரின் தலையீட்டால் சொக்கலிங்கத்துக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையில் நிலவி வந்த இனிமை திடீரென்று திரைதட்டிப் புளித்து விட்டது. சந்தேகத்தைவிட கொடிய விஷம் வேறு கிடையாது. அது படுவதும் தெரியாது; உள்ளத்தில் பரவுவதும் தெரியாது. புதுமைப்பித்தனுக்கும் சொக்கலிங்கத்துக்கும் மனசில் கலை நி யுண்டாக்கிய சந்தேகம் விஷய விளக்கத்திற்கோ தெளி விற்கோ கட்டுப்பட்டு இறங்காத அளவுக்குப் பரவி நீலம் பாரித்து விட்டது. இந்தமாதிரிச் சந்தர்ப்பத்தில் தினசரியில் ஒரு கதாசிரியர், இலக்கிய வெளியீடுகளைப்பற்றிச் சர்ச்சை செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் மூலமாக அந்தக் கதாசிரியர் சொக்கலிங்கத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு பதிப் பகத்தாரை, ஒரு விதத்தில் சொக்கலிங்கத்தையே, தாக்கி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை புதுமைப்பித்தனின் மேற் பார்வைக்கு உட்பட்டு வெளிவந்தது. இந்த விஷயம் சொக்க லிங்கத்துக்குத் தெரிய வந்தது. வேடனே அவர் புதுமைப் பித்தளைக் கூப்பிட்டு விசாரித்தார். பிறகு, * 'இதற்கு ஒரு மறுப்புக் கட்டுரை எழுதி வெளியிடுங்கள் என்றும் உத்தர விட்டார், புதுமைப்பித்தனும் எழுதி வெளியிட்டார். ஆனால் அந்த மறுப்பு, ஆசிரியருக்குத் திருப்தி அளிக்கவில்லை, புதுமைப்பித்தனை மீண்டும் அழைத்து, இன்னும் காரசாரமாக எழுதும்படிச் சொன்னார். • இதற்கு மேல் எழுத' விஷயம் இல்லை என்றார் புதுமைப்பித்தன், சரிதான். : தினமணியில் 'ரசமட்டம்' என்று எழுதும் போது மட்டும் கை வலிக்கவில்லை... இதற்கு மட்டும் வலிக் கீறதோ ? என்றார் ஆசிரியர்,