பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-12 - விடுதலைப் பத்திர திருநெல்வேலியில், 1933-ம் வருஷத்தில், தந்தையிடம் ஏற்பட்ட கசப்பின் காரணமாக, பத்திரிகைத் தொழிலையே லட்சியமாகக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் புதுமைப்பித்தன்; அதே - புதுமைப்பித்தன் இடைப்பட்ட பதினோரு வருஷ காலத்தில் தமது லட்சியமான பத்திரி கைத் தொழிலையும் பார்த்து முடித்து, 1944-ம் வருஷம் அதே லட்சியத்தைக் கைவிட்டு, தினசரியிலிருந்து , வெளியேறி னார். அன்று. திருநெல்வேலியை , விட்டு வெளியேறிய போதும், அவருக்கு வாழ்வது எப்படி " என்பதுதான் பிரச்னை; பதினோரு வருஷங்களுக்குப் பிறகும், கிட்டத் தட்ட நாற்பதாவது வயதிலும் அதே' பிரச்னைதான் அவர் முன் மீண்டும் எழுந்து நின்றது. ஆனால், ஒரே ஒரு வித்தி யாசம் இருந்தது. அன்று , புதுமைப்பித்தன் வெறும் சொ விருத்தாசலம்;, தினசரியை விட்டு, வெளியேறியபோது புதுமைப்பித்தன், ' தமிழர்களிடையே தமது . எழுத்தின் மூலம் அறிமுகமாகி, புகழ் என்ற" மூலதனத்தைச் சம்பா தித்த கதாசிரியர் புதுமைப்பித்தனாக இருந்தார். ஆனால் இந்த மூலதனம் மட்டும் வயிற்றுக்குச் சோறிடுமா? எனவே ஒரு வகையில் புதுமைப்பித்தனின் நிலை நிர்க்கதியான நிலை தான். இருந்தாலும் திருநெல்வேலியை விட்டு வெளி யேறிய புதுமைப்பித்தனுக்குத் தாற்காலிக சாந்திக்குக்கூட வழியில்லாமல் இருந்தது; தினசரியை விட்டு வெளியேறிய புதுமைப்பித்தனுக்கு எதிர்காலம் , அவ்வளவு தூரம். இரு இடித்துப்" போகவில்லை. தினசரி ராஜிநாமா' என்ற விடுதலைப் பத்திரத்தால் ஏற்பட்ட. 'சிரமத்தை, இன்னொரு விடுதலைப் பத்திரம் பரிகாரம் செய்து குறைத்தது. அது