பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புதுமைப்பித்தன் தான் புதுமைப்பித்தன் தம் தந்தையோடு கொண்டிருந்த வாரிசுத் தொடர்பைப் பொருளாதார ரீதியில் அறுத்துக் கொண்ட விடுதலைப் பத்திரம். 1943-ம் வருஷம் சென்னை நகரம் ஜப்பானியக் குண்டு வீச்சுக்குப் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருந்த காலம், சென்னை மக்கள் அனைவரும் பயபீதியால் கிராமாந்திரங் 'களுக்குக் குடியைக் கிளப்பிக்கொண்டு போக முயன்ற காலம். இந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் தமது மனைவியை மட்டும் திருநெல்வேலியில் , விட்டு ' வைக்க நினைத்தார். இதனால் அவருக்குத் திருநெல்வேலிப் பய ணம் லபித்தது, திருநெல்வேலியில் அவர் மனைவி குடியிருக்க ஒரு வீடு தேவை, சென்னையில் ஒரு வீடு, திருநெல்வேலியில் , ஒரு வீடு என இரண்டு வீடுகளுக்கும் வாடகை கொடுத் துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் தமிழ் நாட்டு உத விப் பத்திரிகாசிரியன் பெறும் ஊசதியும் இடம் தராது. எனவே புதுமைப்பித்தன் தம் . தந்தை சொக்கலிங்கம் பிள்ளைxைt அணுகினார். தந்தையோ' , முதல்தர. நெஞ் சழுத்தக்கார ஆசாமி. அவருக்குத் '- திருநெல்வேலியில் மூன் று நான்கு வீடுகள் இருந்தன. ஏதாவது ஒரு வீட் டைக் குடியிருக்கக் கொடுத்திருக்கலாம். ஆனால் மகன் குடியேறினால் எங்கே அதைத் தன் சுவாதீனத்துக்கு உள்ளாக்கி விடுவானோ என்று உள்ளூர அவருக்குப் பயம். எனவே வீடு தர மறுத்தார். ஏற்கெனவே இரு துருவங் களாகத் தந்தையும் மகனும் பிரிந்து சென்றவர்கள்.' எனவே அந்த இரு துருவங்களும் ஒன்றையொன்று சந்திக்க முனைந்தபோது மோதல்தான் ஏற்பட்டது. புதுமைப்பித்தன் தந்தையோடு சண்டை பிடித்தார். வீடு தர வேண்டும் அல்லது பாகப் பிரிவினை நடந்தாக வேண் டும் என்பதே புதுமைப்பித்தனின் கோரிக்கை. சொக்க லிங்கம் பிள்ளையோ வீடு தர மறுத்தார். இந்தச் சமயத் தில் கமலாம்பாள் அம்பாசமுத்திரத்தில் ஒரு உறவினர் வீட்டில் இருந்தாள், திருநெல்வேலியில் தந்தைக்கும் மக னுக்கும் நடந்த லடாய் கமலாம்பாளுக்குத் தெரியாதா.