பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வா, இலக்கியமா? இருந்தார். யாரோ சொன்ன மாதி3,: 'எழுத்தாள் என்றால் முழுப் பட்டினி!; பத்திரிகாசிரியன் என்சூரல் அரைப் பட்டினி' என்ற சொல் பொய்யல்ல. புதுமைப் பித்தலும் அதை உணர்ந்திருந்தார். பத்திரிகையில் பல் வருஷ காலம் உழைத்தும், நடை முறையில் அவர் கண்ட பலன் தீராத , தொண்டைப் புகைச்சலும் ஓயாத மனப் புகைச்சலும்தான். எனவே 'வாழ்வா, இலக்கியமா?' என்னும் கேள்வி தான் அவர் முன் கொக்கியிட்டு நின்றது. அவர் இரண் டை, யும் விரும்பினார். வாழ்வும் செழிக்கவேண்டும்; இலக் கியமும் செழிக்கவேண்டும். ஆனால்.. இலக்கியம் செழிக்க வேண்டுமானால், முதலில் எழுத்தாளனின் வாழ்வு. செழிக்க வேண்டும்; செழிப்பதற்கான நம்பிக்கையாவது வேண்டும். புதுமைப்பித்தன் ' : இவ்வாறெல்லாம், கணக்கிட்டுப் பார்த் தாலும் பார்க்காவிட்டாலும், இந்த எண்ணம்தான் அவ ரது மனத்தை ஆட்கொண்டது. எனவே முதலில் வாழ்வு செழிக்கவேண்டும். அதற்கான தொழில் ஃகான்ன? இது புதுமைப்பித்தனின் சிந்தனை; பிரச்னை. வாழ்வு செழிக்க, உன்னதம் பெற, திருப்திகரமாகக் கொண்டு செலுத்தப் - பணம் வேண்டும். தொட்டும் துடைத்தும் ஒரு ' மாதிரியாக வாழ்வை ஓட்டியவர். 'உதவிய கொஞ்ச நஞ்ச வருவாயும், பத்திரிகைத் தொழிலை விட்டு விலகியவுடன், தானும் விலகிவிட்டது. ' 'பணம் எப்படி வரப்போகிறது என்பதே , ' அவரது அன்றாடக் கேள்வி; கவலைக்கும் மன உளைச்சலுக்கும் எல்லையே காட்டாமல் அந்தக் கேள்வி குறுக்கே - நின்றது. இந்தச் சந்தர்ப்பத் தில்தான், அவரது மனசில் சினிமாத் தொழிலைப் பற்றிய அபிப்பிராயம்' உரம் பெற்றது.

  • சினிமாவுக்குக் கதை வசனம் - எழுதினால் என்ன?

நமக்குத் தெரிந்த ஒரே தொழிலான - 'இலக்கியத்தை உபயோகப் படுத்தவும் இடமுண்டு; பணவசதிக்கும் வகு வாய்க்கும் இடமுண்டு: லட்சியம் லட்சியம் என்று கூறி வயிற்றை இறுக்கிக் கட்ட முடியாது: இலக்கியத் தை விலை பேசாமல், விற்காமல் முடியாது. சுவர் இருந்தால்தான்