பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் சித்திரம் வரைய முடியும்; முதலில், 'சுவர் நிலைக்கவேண்டும். அதற்குப் பணம் தேவை, பணம் வந்துவிட்டால் பிறகு லட்சியத்தையும் அதன் துணைகொண்டு நிறைவேற்றப் பார்க்கலாமே! பணம். எந்தத் தொழிலால் வருகிறது என்பது இப்போது பிரச்னையல்ல.. பணம்தான் தேவை. நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்? பெரிய பேச்சுப் பேசி, புராணமே பிடிக்காது என்று சொல்பவர்களே" திரைமறைவிலிருந்து திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதத் துணியும்போது நாம் மட்டும் ஏன் துணியக் கூடாது?....” புதுமைப்பித்தன் சினிமா உலகத்துக்குள் புகும்போது இப்படியெல்லாம் யோசித்ததுண்டு, கடைசியில் அவர் சினிமாவுக்குக் கதை வசனம் எழுதுவதையே, தொழிலாக மேற்கொள்ள விரும்பினார். சினிமாவுக்குக் கதை வசனம் எழுதுவது இலக்கிய சேவைக்குப் புறம்பட்டதல்ல. ஆனால் இன்று தமிழ் நாட்டில் சினிமாவுக்குக் கதை வசனம் எழு தும் தொழில் இருக்கின்ற நிலைதான், அதாவது மக்களுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும் என்பதைவிட, தமது பாங்க் இருப்பில் எத்தனை இலக்கத்தைக் கூட்டமுடியும் என்று பட முதலாளிகள் கருதுகின்ற நிலைதான் புதுமைப்பித்தனை இத்தனை தூரம் சிந்திக்கச் செய்தது. அவர் எவ்வளவு தான் சிந்தித்தாலும். இன்றைய சமுதாய அமைப்பில் அவர் உயிர் சுமந்து வாழவேண்டுமென்றால், பணத்தின் சந்நிதியில் தலை வணங்குவதைத் தவிர வேறு. மார்க்கம் அவருக்குக் கிடையாது; தனி மனிதனின் லட்சியம் செல்லு படியாகாது. எனவே புதுமைப்பித்தன் கதை வசனம் எழுத முன் வந்ததில் ஆச்சரியமில்லை. வாழ்வுப் பிரச்னைக்கு புதுமைப்பித்தன் சினிமாவை ஒரு வழியாகக் கண்டார்; ஆனால், அதே சமயம் அவர் தமது இலக்கியப் பிரச்னையையும் மறந்து விடவில்லை. பத்திரிகைத் தொழிலை விட்டு விலகினாரே ஒழிய, இலக்கி யத்தைக் கைகழுவி விடவேண்டும் என்று அவர் விரும்பிய தில்லை. காலமும் வசதியும் ஏற்படும்போது, அதாவது சினிமாத் துறையின் மூலம் கையில் காசு பணம் நன்கு புரள ஆரம்பித்தால், சொந்தத்திலேயே ஒரு பத்திரிகை வெளி