பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வா, இலக்கியமா? S? யிட்டு, அதில் தமது அற்புத சிருஷ்டிகளை வெளி.ட்டு வரவேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்தது. ஒரு தடவை அவர் என்னிடம் சொன்னார்: ராசா, கையில் பணம் சேரட்டும். நாம் ஒரு பத்திரிகை ஆரம்பிப்போம், இலக்கியப் பத்திரிகை. பத்திரிகையின் பெயர் என்ன' தெரி

  1. மா? 'சோதனை!

'சோதனை'யைப் பற்றிய எண்ணம் அவரை மிகவும் ஆட் கொண்டிருந்தது. 1946-ம் வருஷம் அவருக்குத் தமது வாழ்க்கை நிலையை ஓரளவு கவலையற்றதாக்கி விட முடியும் என்ற நம்பிக்கையும், பத்திரிகையை ஆரம்பிப்ப தற்கான செளகரியங்கள் வாய்ப்பதற்கான சந்தர்ப்பங் களும் பெருகி வந்தன, அந்தச் சமயத்தில் நான் திருநெல் வேலிக்குச் சென்றிருந்தேன். அப்போது புதுமைப்பித்தன் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்:

  • '... நமது யோசனைகள், திட்டங்கள் யாவும் ஆசைப்

பருவத்திலிருந்து ஏழாவது மாசக் கரு மாதிரி உருவமும் உயிர்ப்பும் பெற்று வருகின்றன. சீராகப் பிரசவமாகும் என்பது பூரண நம்பிக்கை. நீ அங்கிருந்து கொண்டு மனசில் ஆயிரம் 'அழிவு-கோட்டை கட்டிக் கொண்டு அவதிப் படாதே. இங்கே எனக்கு மேலுக்குமேல் வேலை வருகிறது. நமது பத்திரிகையின்மீது என் கவனம் குறையுமோ என நானே பயப்படும்படியாக இருக் கிறது... 5rmவே புதுமைப்பித்தன் பணத்தாசையினால்தான் சினிமாத் துறையில் புகுந்தார் என்று எவரேனும் 'கருதி னால், அது தவறு. புதுமைப்பித்தனுக்குக் குபேரப் பிரபு வாகி, கோயில் கட்டவேண்டும் என்ற பேராசை இருந் ததே கிடையாது. பின்னொரு சமயம் அவர் பணக் கஷ்டத் துக்கு ஆளானபோது, ஒரு நண்பரிடம் தமது துயரத்தை வெளியிட்டார். அப்போது அவர் சொன்னது இதுதான்:

  • * எனக்கு விளையாடப் பணம் வேண்டாம்; ஆனால் வேளா

வேளைக்குச் சாப்பிடவாவது பணம் வேண்டாமா? புதுமைப்பித்தனின் இந்தக் கூற்றிலுள்ள வேதனை இருக்