பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-13', சீனியத் துறையில் புதுமைப்பித்தன் சினிமாத் துறையில் புகுவது என்று முடிவு கட்டினார். ஆனால், - யாரை அணுகுவது, எப்படி அணுகுவது : என்பதே அடுத்த பிரச்னையாக இருந்தது. ஆனால், இந்தப் பிரச்னை தீர்வதற்கு அவருக்கு வெகு நாள் பிடிக்கவில்லை. புதுமைப்பித்தன் தினசரியை விட்டு விலகி கிட்டார். என்பதும், அவர் நல்ல எழுத்தாளர் என்பதும், சினிமாத் துறையில் புக விரும்புகிறார் என்பதும் ஊர் அம்பலமாகாத ரகசியம் ஒன்றுமல்ல. எனவே சினிமாத் துறையில் இடம் கிடைப்பதில் அவருக்குச் சிரமம் ஒன்று மில்லை. எடுத்த எடுப்பிலேயே, இவராகப் போவதற்கு முன் சீதேவி இவரைத் தேடி வந்தாள். அப்போது மாம்பலத்தில் ஒரு புதிய சினிமாக் கம்பெனி உருவாகியது. அதன் பெயர் பாலகோபால் சினிமாக் கம்பெனி என்பது; அதன் உரிமையாளர் பால் கோபால் நாயுடு என்பவர். அவர் புதுமைப்பித்தனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்தார், அவர் வந்து சேர்ந்த வேளை, புதுமைப்பித்தனுக்கு வறட்சிக் காலம். வந்தவர் புதுமைப்பித்தனை ஒரு சினிமாக் கதை எழுதித் தரும்படியாகச் சொல்லி ஐநூறு ரூபாய் அட்வான்சும் கொடுத்துவிட்டுப் போனார், வறண்ட பூமிக்குத் தூவானமே "பெரிதல்லவா? . செழிப்பு வரத் தொடங்கி விட்ட்து, நல்ல காலம் பிறந்து விட்டது எனக் குதூகலம் கொண்டார் புதுமைப்பித்தன், ஆனால், பால்