பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாத் துறையில் 87 எழுதி முடித்ததையெல்லாம் என்னிடம் காட்டாமல், அவர் அனுப்புவதில்லை. 'அவ்வை யில் அவர் எழுதிய வரிகள் பல எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கின்றன, - அவ்வையை அவர் அறிமுகப் படுத்துகின்ற முதல் காட்சியைப் படிக் சூம்போதே உடம்பு புல்லரித்தது. அவ்வை சோழராஜ் யத்திலுள்ள: பாழ்மண்டபத்தில் குடியிருந்த பேயை “எற்றே மற்றெற்றே மற்றெற்று' என்ற ஈற்றடி.யுடன் நான்கு வெண்பாக்களால் விரட்டுகிறாளே, அதில்தான் காட்சி ஆரம்பம், இருட்டிலே ஆரம்பம், அவ்வை ' இருட் டிலே அறிமுகமாகிறாள். சோழன் நகர் சோதனைக்காக இருட்டிலே வருகிறான். இருவரும் இருளில் ஒருவரை யொருவர் இனம் தெரியாமல் சந்திக்கிறார் கள். பேயை: விரட்டிய காட்சியை மன்னன், பார்க்கிறான். இருட்டிலே முகம் தெரியாமற் போனாலும் அவ்வையின் அகத்தை உணர்கிறான். , 'தாயே, இந்தப் பாழ்மண்டபத்திலா தங்க வேண்டும்? அரண்மனைக்கு வாருங்கள் என்கிறான் சோழன், 'பாழா? இந்த உலகமே பாழிலிருந்து பிறந்தது தானே' என்கிறாள் அவ்வை, அவ்வையின் கதையை புதுமைப்பித்தன் இப்படித்தான் ஆரம்பித்தார். இது போலவே அதியமான் அவ்வைக்குச் சாகாவரம் தரும் நெல்லிக்கனியைத் தர முனையும்போது, அவ்வை அவனைப் பார்த்துக் கேட்கிருள்: 'மன்னா! உலகத்துக்குள் வர ஒரு வழிதான் உண்டு; போவதற்கோ பல வழிகள் இருக்கின் றன. அத்தனை வழிகளையும் இந்த நெல்லிக்கனி அடைத்து விடுமென்று எதிர்பார்க்கிறாயா?' உதாரணத்துக்குத்தான் - இவற்றைச் சொன்னேன், புதுமைப்பித்தனின் 'அவ்வை' இம்மாதிரி பொருள் ஆழம் , மிகுந்த வசனங்களால் செழிப்புற்று விளங்கியது. புதுமைப்பித்தனின் 'அவ்வை' வசனத்தை ஜெமினி ஸ்தா பனத்தார் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அவர் எழுதிய அவ்வையின் சரித்திரம் புத்தக உருவிலாவது வெளிவருமானால் அது ஒரு சிறந்த இலக்கியப் போக்கிஷ மாகவே தமிழர்களுக்குப் பயன்படும் என்பது உறுதி. புதுமைப்பித்தன் அவ்வைக்கு வசனம் எழுதிக்கொண் டிருக்கும் காலத்திலேயே முருகதாஸாவின் ஆதரவினால், உலக,ே வாருங்கள். பத்திரத்தை