பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் என்ன என்று கேட்டேன். 'ருசிகரமான விஷயம் இருக்கு” என்றார் புதுமைப்பித்தன். ஆசாமி வரவே காணோம். நான் புறப்பட்டு வந்து விட்டேன். வரும்போது, அவர் வந்தால் பார்க்கட்டு மென்று ஒரு பாட்டு எழுதி, வைத்துவிட்டு வந்தேன். நீ பாட்டைக் கேள், மற்ற விஷ்யம் ஒன்றும் சுவாரசிய மில்லை என்றார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் மதுரை ஹோட்டலில் விட்டு விட்டி வந்த பாடல் நறுக்கு இதுதான்: வருகின்றேன் சென்னைக்கு ; வந்தவுடனே கதையைத் தருகின்றேன்; தவணை சொலித் தப்பாதே-உருவான பாதிக்கதை இங்கே, பஞ்சணையின் கீழிருக்கு; மீதிக்கதை அங்கே வந்து! பாட்டைக் கேட்டவுடனேயே எனக்கு விஷயம் புரிந்து விட்டது. புதுமைப்பித்தன் அந்தப் படக் கதையை எழுதி முடித்து விட்டார்; பெரும்பாகம்' வசனமும் எழுதி முடித் தார், ஆனால் படம் தான் உருவாகவில்லை; எனவே புது -மைப்பித்தனுக்குப் பணமும் ஒழுங்காகக் கிடைக்கவில்லை. இந்தப் படக் கதைதான் பின்னர் *வாக்கும் வக்கும்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. படத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்காத பாவத்துக்கு, அதன் கதையாவது படிக்கும் பாக்கியத்தைத் தமிழர்கள் பெறக்கூடுமல்லவா? 'லஷ்மி விஜயம்' என்ற கதை புதுமைப்பித்தனின் பொறுப்பில் எப்படி வருவதுபோல் காட்டி ஓடிப் போய் விட்டதோ, அதுபோலவே லஷ்மி கடாக்ஷமும், அதாவது பொருள் . வருவாயும் புதுமைப்பித்தனை ஆசை காட்டி மயக்கி விட்டுப் பின்வாங்கி விட்டது. 1947-ம் வருஷத்தின் முன்பகுதியில் புதுமைப்பித்தனிடம் மீண்டும் வறட்சி குடி புகுந்து விட்டது. இதற்குக் காரணம் புதுமைப்பித்தனின் தர்க்கத்தனம் என்று குற்றம் கூற முடியாது. புதுமைப் பித்தன் ஐகப்புருவை வைத்து மணிப் புறாவைப் பிடிக்கும்