பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாத் துறையில் 7! ஓர் அசட்டுக் காரியத்தில் இறங்கினார்; அதன் பலனாக மணிப்பு: சிக்காதது மட்டுமல்ல, கைப்புருவும் பறந் தோடி விட்டது. அது ஒரு சோகக் கதை. நட்சத்திரம் திடீரென்று பாய்ந்து விழுவதுபோல், புதுமைப்பித்தனின் பொருளாதார வாழ்வில் ஒரு பிரகாச மான ஒளி தோன்றியது; ஆனால் கொஞ்ச காலத்திலேயே அது மறைந்து விட்டது. கைமுதலையும் இழந்து எந்த வித மான வரும்படியுமற்ற 'வறிய நிலையில் புதுமைப்பித்தன் பட்ட துயரங்கள் கொஞ்சமல்ல. இம்மாதிரியான நிலை யில் அவர் பலமாதம் காலம் தள்ளினார். இந்த நிலைக்கும் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பாலகோபால் நாயுடு மீண்டும் வந்தார், புதுமைப்பித்தனைத் தாம் கேட் 'டிருந்த கதையை முடித்துத்தர வேண்டுமாறு கேட்டுக் கொண்டார். அவசரப் படுத்தினார். ஆனால் பாலகோபால் நாயுடு வரும் சகுன பலன் - புதுமைப்பித்தனுக்கு ஒரு நல்ல காலத்தையும், தாயுடுவுக்கு ஏமாற்றத்தையும் கொடுக் கின்ற ராசியோ, என்னவோ? முதலில் அவர் வந்தபோது, புதுமைப்பித்தனுக்கு ஜெமினியில் சந்தர்ப்பம் கிடைத் தது. இரண்டாம் தடவை அவர் வந்தபோது, புதுமைப் பித்தனுக்கு வேறொரு அரிய சந்தர்ப்பம் எதிர் நோக்கி வந்தது. அந்தச் சந்தர்ப்பம்தான் புதுமைப்பித்தன் கடைசி வாக எழுதிச் சென்ற 'ராஜ முக்தி' என்ற படம். 'ராஜ முக்தி' எம். கே. தியாகராஜ பாகவதர் எடுத்த சொந்தப் படம்; பாகவதரின் ஆட்கள் புதுமைப்பித்தளை “ராஜ முக்தி' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதற்காகக் கேட்க வந்தனர். புதுமைப்பித்தனும் ஒப்புக் கொண்டார். வந்தவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே ஒரே. மர்ம மாக இருந்தன. புதுமைப்பித்தனோடு பேசியதுகூட ரகசிய மாகவே நடந்தது. புதுமைப்பித்தனை' பாகவதரின் இருப் இடமாகிய திருச்சிக்கு அழைத்துச் சென்றதும் ரகசியமாக நடத்தது: , ரயிலில், புதுமைப்பித்தனுக்கு, இடவசதி. 'புக்' தெய்த்து கூடy: வேறு யார் பெயரிலேயோ நடந்தது. இதெல்லாம் எதற்கு என்பது சம்பந்தப்பட்டவர்களின்