பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்வதகுமாரி 75 ஆனால், பர்வதகுமாரி புரொடக்ஷஸ் என்னும் புதுமைப்பித்தனின் அசட்டுத் தனமான அக்னிப் பரீட்சை அவரது எதிர்காலத்தையே சுட்டுச் சாம்பலாக்கி, அவரை யும் பொசுக்கித் தள்ளி விட்டது. பர்வதகுமாரி ' என்னும் இந்தப் புதிய முயற்சி. அவரது ரத்தத்தை உறிஞ்சித் தீர்த்த காட்டு மோஹினி; அவரது உயிருக்கே உலை வைக்க" வந்த ஏழரைச் சனி! பர்வதம் என்ற சொல் புதுமைப் பித்தனின் மனத்தில் எவ்வளவு பவித்திரமும் புனிதத் தன்மையும் கொண்டு குடியிருந்ததோ, அதை யெல்லாம் இழந்ததோடு மட்டுமல்லாமல், கொஞ்ச காலத்தில் நினைத் தாலே குலை நடுங்கும் பேய்க்கனவாக, ரத்தக் காட்டேரி பாக மாறிவிட்டது. 1946-ம் வருஷத்தின் பிற்பகுதி என ஞாபகம், அப் போது நான் சென்னையில் நண்பர் ப. முத்தையா நடத்தி வந்த “முல்லை' எனும் மாசிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று வேலை பார்த்து வந்தேன். புதுமைப்பித்தனும் நானும் அந்தக் காலத்தில் பேசாத நாளெல்லாம் பிறவா நாட்களாகக் கருதி, தினம் தினம் பேசிக் கொண்டிருந்த துண்டு. ஒருநாள் அவர் என்னைப் பார்த்துத் திடீரெனக் கேட்டார்; - என்ன ராசா, குற்றாலக் குறவஞ்சிக் கதையை சினி மாவுக்கு எழுதினால் எடுக்குமில்லா? என்ன சொல்றே? ஏன், - எவனாவது கேட்டிருக்கிறானா? எடுக்குமோ எடுக்கலையோ-பணம் வந்தால் சரிதான்” என்றேன் நான். “இது ஊரானுக்கு இல்லையப்பா, சொந்தப் படம்! என்னால், பதிலே பேச முடியவில்லை. புதுமைப்பித்த னோடு நான் பழகிய முறையில் எனக்குத் தெரியாத எந்த வித அந்தரங்கமும் அவரிடம் கிடையாது. திடீரென்று சொந்தப் படம் என்று சொன்னதும் எனக்கு அது புரி யாத புதிராக இருந்தது. என்ன - முழிக்கே? இருக்கு. விஷயம் இருக்கு! * * என்று மிகவும் நம்பிக்கை தரும் குரலில் அழுத்திக் கூறி விட்டுத் தலையை ஆட்டினார் புதுமைப்பித்தன்.'